Lava Agni 3 5G : லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
லாவா நிறுவனம் Lava Agni 3 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்துள்ள இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
Lava Agni 3 5G Specifications :
- Lava Agni 3 5G Display : இந்த லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1K 3D டிஸ்பிளே வசதியுடன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் HDR 10 உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த லாவா அக்னி ஸ்மார்ட்போனில் 1.74-இன்ச் அளவுடைய சிறிய அமோலெட் டிஸ்பிளேவும் வழங்கப்பட்டுள்ளது.
- Lava Agni 3 5G Camera : இந்த லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனில் OIS ஆதரவு கொண்ட 50MB சோனி சென்சார் கேமரா + 8MB டெலிபோட்டோ கேமரா + 8MB அல்ட்ரா வைடு கேமரா என்ற ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும் வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே தனியே 16MB சாம்சங் சென்சார் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
- Lava Agni 3 5G Storage : இந்த லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன் 8GB RAM + 128GB மெமரி மற்றும் 8GB RAM + 256GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த லாவா அக்னி போனில் 1TB வரை மெமரி கார்டு பயன்படுத்துவதற்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
- Lava Agni 3 5G Battery : இந்த லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி வசதியுடன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விரைவாக சார்ஜ் செய்ய 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
- Lava Agni 3 5G Rate : 8GB RAM + 128GB வேரியண்ட் விலை ரூ.20,999/- ஆகவும், 8GB RAM + 256GB வேரியண்ட் விலை ரூ.24,999/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் அக்டோபர் 9-ம் தேதி முதல் அமேசான் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த லாவா அக்னி போனை வாங்குபவர்களுக்கு ரூ.2000 தள்ளுபடி கிடைக்கிறது.
Latest Slideshows
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது
-
Bitchat App : இணையதளம் இல்லாதபோதும் மெசேஜ் அனுப்ப பிட்சாட் செயலி அறிமுகம்
-
Apollo Hospitals Success Story : இந்தியாவின் முதல் பெருநிறுவன மருத்துவமனை அப்பல்லோவின் வெற்றிப் பயணம்