LCU Short Flim : லோகேஷின் LCU ஷார்ட் ஃபிலிம்

LCU Short Flim :

கோலிவுட்டில் சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்கியவர் லோகேஷ் கனகராஜ். அவரது LCU உருவாக்கம் பற்றிய குறும்படம் (LCU Short Flim) ஒன்று Netflix இல் வெளியாகவுள்ளதாம். மேலும் இதன் OTT ரைட்ஸ் பல கோடிகளுக்கு விலை போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்,

முதல் படத்திலேயே திரும்பி பார்க்க வைத்த லோகேஷ், இரண்டாவது படமான கைதியில் கார்த்தியை இயக்கினார். இந்த படம் எதிர்பாராத விதமாக சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனால் லோகேஷின் மார்க்கெட் வேல்யூ எகிறியது. அதேபோல் மூன்றாவது படத்திலேயே விஜய்யுடன் இணைந்தார். அதன்படி விஜய்-லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படமும் சூப்பர் ஹிட்டானது. இதனால் கமல் – லோகேஷ் கூட்டணியில் உருவான விக்ரம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இறுதியாக கடந்த ஆண்டு வெளியான விக்ரம் கோலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமாவையே அதிர வைத்தது. கைதி படத்தில் இருந்து லீட் எடுத்து விக்ரமை இயக்கிய லோகேஷ், தனக்கென ஒரு சினிமாட்டிக் யூனிவர்ஸை உருவாக்கினார்.

அதன் அடிப்படையில் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் என்ற LCU உருவானது. அதேபோல், சமீபத்தில் வெளியான விஜய்யின் லியோவை LCU பின்னணியில் இயக்கியிருந்தார் லோகேஷ். இதனால் LCU என்பதே மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கியது மற்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், ரஜினியின் தலைவர் 171 படத்திற்கு பிறகு லோகேஷ் கைதி 2 படத்தை இயக்கவுள்ளார். LCUவின் தோற்றம் மற்றும் கார்த்தியின் ஃப்ளாஷ்பேக்கை இந்தப் படம் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரோலக்ஸ் தனி படமாக உருவாகும் என்பதையும் லோகேஷ் உறுதி செய்துள்ளார். இறுதியாக விக்ரம் 2 ஆம் பாகத்தோடு LCU முடிவுக்கு வரும் என்றும் லோகேஷ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் LCU உருவாவது குறித்து குறும்படத்தை (LCU Short Flim) லோகேஷ் இயக்கியுள்ளார்.

கைதி, விக்ரம் படங்களில் நடித்த நரேன் இந்தப் படம் பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி இந்த ஷார்ட் ஃபிலிம் (LCU Short Flim) 30 முதல் 45 நிமிடங்கள் ஓடும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தை யூடியூப்பில் வெளியிட முதலில் லோகேஷ் முடிவு செய்திருந்தார். ஆனால் லோகேஷின் மார்க்கெட் மதிப்பை அறிந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் LCU ஷார்ட் ஃபிலிம்மை வாங்கியதாக கூறப்படுகிறது. 3 கோடி ரூபாய்க்கு LCU ஷார்ட் ஃபிலிம்ஸ் (LCU Short Flim) OTT உரிமையை வாங்கிய Netflix நிறுவனம் இந்த படத்தை ஜனவரியில் வெளியிட முடிவு செய்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply