Lenovo Diwali Sale 2023 : Laptop மீது 48% தள்ளுபடியை அறிவித்த Lenovo நிறுவனம்

Lenovo Diwali Sale 2023 :

லெனோவாவின் இந்த 2023 தீபாவளி விற்பனையின் (Lenovo Diwali Sale 2023) கீழ் லேப்டாப்கள், டேப்லெட்டுகள் மற்றும் பிற அக்ஸசெரீஸ்கள் மீது 60% வரையிலான தள்ளுபடியை அறிவித்துள்ளது. எந்த வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தினாலும் 10% வரை கேஷ்பேக் மற்றும் ரூ.7,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தீபாவளி சிறப்பு விற்பனையின் (Lenovo Diwali Sale 2023) போது லெனோவா தயாரிப்புகளின் மீது 6 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் EMI விருப்பமும் அணுக கிடைக்கிறது. இப்படியாக என்னென்ன லெனோவா லேப்டாப்கள், டேப்லெட்கள் மற்றும் அக்ஸசெரீஸ்கள் மீத என்னென்ன சலுகைகள், தள்ளுபடிகள் கிடைக்கிறது என்ற விவரங்களை பார்க்கலாம்.

1. திங்க்பேட் இ16 லேப்டாப் ThinkPad E16 Laptop :

லெனோவா நிறுவனத்தின் திங்க்பேட் (ThinkPad) ஐடியாபேட் (IdeaPad) லெஜியன் (Legion) மற்றும் யோகா சீரீஸ்களை (Yoga Series) உள்ளடக்கிய லேப்டாப் மாடல்களுக்கு 48% வரையிலான தள்ளுபடி கிடைக்கிறது. குறிப்பாக 13த் ஜென் இன்டெல் ஐ5 ப்ராசஸர், 16GB  RAM  மற்றும் 512GB எஸ்எஸ்டி ஹார்ட் டிரைவ் கொண்ட திங்க்பேட் இ16 லேப்டாப் (ThinkPad E16 Laptop) மாடலானது அசல் விலையை விட 41% குறைந்து ரூ.71,990 என்ற தள்ளுபடி விலையில்  (Lenovo Diwali Sale 2023) கிடைக்கிறது.

2. லெனோவா இ16 லேப்டாப் Lenovo E16 Laptop :

ஏஎம்டி ரைஸன் 5 ப்ராசஸர்,16GB  RAM , 512GB  எஸ்எஸ்டி ஹார்ட் டிரைவ் மற்றும் ஒருங்கிணைந்த ஏஎம்டி ரேடியான் கிராபிக்ஸ் கார்டு கொண்ட இ16 லேப்டாப் மாடலானது 36% சதவீத தள்ளுபடியை பெற்று ரூ.61990 என்ற தள்ளுபடி விலையில்  (Lenovo Diwali Sale 2023) கிடைக்கிறது.

3. லெனோவா-ஐடியாபேட்-ஸ்லிம் Laptop :

11த் ஜென் இன்டெல் ஐ7 ப்ராசஸர், 16GB RAM, 512 GB எஸ்எஸ்டி ஹார்ட் டிரைவ் மற்றும் என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ் 450 கிராபிக்ஸ் கார்டு ஆகியவற்றைக் கொண்ட ஐடியாபேட் ஸ்லிம் லேப்டாப் மாடலானது 42% சதவீதம் தள்ளுபடியை பெற்று ரூ.62,990 என்ற தீபாவளி தள்ளுபடி (Lenovo Diwali Sale 2023) விலையில் கிடைக்கிறது.

4. Premium Laptop Series :

லெனோவா நிறுவனத்தின் பிரீமியம் லேப்டாப் சீரீஸ் (Premium Laptop Series) ஆன லிஜியன் சீரீஸ் லேப்டாப் மாடல்கள் ஆனது 46% சதவீதம் வரையிலான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. லிஜியன் 5 ப்ரோ (Legion 5 Pro) மாடலானது ரூ.112,490 என்ற தீபாவளி தள்ளுபடி விலையில் (Lenovo Diwali Sale 2023) கிடைக்கிறது.

5. Lenovo Tab P11 :

லெனோவாவின் இந்த தீபாவளி தமாக்கா விற்பனையில் Lenovo டேப்லெட்டுகள்  தள்ளுபடி விலையில்  கிடைக்கிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி99 ப்ராசஸர், 6 GB RAM  மற்றும் 128 GB இன்டெர்னல் மெமரி உடன் வரும் டேப் பி11 (Lenovo Tab P11) மாடலானது 51% சதவீத தள்ளுபடிக்கு பிறகு ரூ.18,999 என்ற தள்ளுபடி விலையில் (Lenovo Diwali Sale 2023) கிடைக்கிறது.

6. Lenovo Tab M10 :

குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர், 6GB  RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஹார்டு டிரைவ் உடன் வரும் லெனோவா டேப் எம்10 (Lenovo Tab M10) மாடலானது 53% சதவீத தள்ளுபடியை பெற்று ரூ.14,999 என்ற தள்ளுபடி விலையில் (Lenovo Diwali Sale 2023) கிடைக்கிறது.

Latest Slideshows

Leave a Reply