லெனோவா நிறுவனம் Lenovo Legion Y700 2024 கேமிங் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது

லெனோவா நிறுவனம் Lenovo Legion Y700 2024 என்ற புதிய கேமிங் டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. பெரிய டிஸ்பிளே, சூப்பர் பவர், குறைந்த பட்ஜெட் என பல சிறப்பம்சங்களுடன் வந்துள்ள இந்த டேப்லெட்டின் ஆன்லைனில் கசிந்துள்ள விவரங்களை பார்க்கலாம்.     

Lenovo Legion Y700 Gaming Tablet 2024 சிறப்பம்சம் :

  1. லெனோவா லெஜியான் Y700 Display : இந்த புதிய லெனோவா லெஜியான் கேமிங் டேப்லெட் 8.8′ இன்ச் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,560 x 1,600 கூகுள் பிக்சல்ஸ், 165Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் பெரிய டிஸ்பிளே வடிவமைப்புடன் விற்பனைக்கு வந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என லெனோவா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கேமிங் விளையாடும் போது ஹீட்டிங் ஆகாமல் இருப்பதற்கு Qiankun Cooling Architecture கூலிங் சேம்பர் அம்சமும் இந்த டேப்லெட்டில் வழங்கப்பட்டுள்ளது.

  2. லெனோவா லெஜியான் Y700 Storage : இந்த புதிய லெனோவா லெஜியான் Y700 கேமிங் டேப்லெட் 12GB RAM + 256GB மெமரி மற்றும் 16GB RAM + 512GB (UFS 4.1) ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  3. லெனோவா லெஜியான் Y700 Colors : இந்த Lenovo Legion Y700 2024 கேமிங் டேப்லெட் முதல் கட்டமாக பிளாக் (Black) நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விரைவில் வைட் (White) நிறத்தில் வாங்க கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

  4. லெனோவா லெஜியான் Y700 Battery : இந்த புதிய லெனோவா டேப்லெட்டில் டூயல் சூப்பர்லீனியர் ஸ்பீக்கர் (Dual Superlinear Speaker) மற்றும் டூயல் எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் (Dual X-Axis Linear) ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 6500mAh பேட்டரி வசதியுடன் இந்த லெனோவா லெஜியான் டேப்லெட் விற்பனைக்கு வந்துள்ளது.

  5. லெனோவா லெஜியான் Y700 Rate : 12GB RAM + 256GB மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.34,600/- ஆகவும், 16GB RAM + 512GB மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.37,900/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply