Lenovo P12 Tablet: அனல் பறக்கும் மிட்-ரேஞ்ச் விலை.. ! 10200mAh பேட்டரி..!!

ஒரு லேப்டாப்புக்கு நிகரான ( 240Hz ) டச் சாம்பிளிங் ரேட் டிஸ்பிளே, (8GB RAM) , 1டிபி மெமரி சப்போர்ட், ஆர்ஜிபி (RGB) கேமரா, 10200mAh பேட்டரி போன்ற பல்வேறு பிரம்மாண்ட அம்சங்களுடன் லெனோவா டேப் பி12 (Lenovo P12 Tablet) டேப் மிட்-ரேஞ்ச் விலையில் தற்போது விற்பனைக்கு வருகிறது.

இப்போது, மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கும் லேப்டாப்களின் பெரும்பாலான அம்சங்கள் டேப் Tab லேயே வந்து விடுகின்றன. குழந்தைகளுக்கு வீட்டுப் பாடங்களை எடுக்கவும், அலுவலகம் சார்ந்த அனைத்து பணிகளை முடிக்கவும் பலருக்கு லேப்டாப்பைவிட டேப்லெட்களே மிகுந்த வசதியாக இருக்கின்றன. இதனால், அதுதொடர்பான வியாபாரமும் சமீபகாலமாக பெருகிவிட்டது.

ஆகவே, டேப்லெட் Tab தயாரிப்பு நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் நல்ல நல்ல அம்சங்களை கொண்ட டேப்லெட்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில், லேனோவா (Lenovo) நிறுவனத்தின் லெனோவா (Lenovo P12 Tablet) ஆனது மிட்-ரேஞ்ச் விலையில் பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, சீனாவில் விற்பனைக்கு வந்து, மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதனால், மற்ற நாடுகளிலும் (டேப் பி12 டேப்லெட்) விற்பனை செய்ய லெனோவா நிறுவனம் திட்டமிட்டது. இந்த அம்சங்களை எல்லாம் பார்த்த இந்திய வாடிக்கையாளர்கள் எப்போது, அந்த டேப்லெட் இங்கு விற்பனைக்கு வரும் என்று காத்துக்கொண்டிருந்தனர். இந்த சூழலில், தற்போது லெனோவா டேப் பி12 டேப்லெட்டின் விற்பனை தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை, முழு அம்சங்கள், உள்ளிட்ட தகவல்களை பார்ப்போம்.

Lenovo P12 Tablet லெனோவா டேப் பி12 அம்சங்கள்

Lenovo P12 Tablet 12.7 இன்ச் (2944 x 1840 பிக்சல்கள்) எல்டிபிஎஸ் எல்சிடி (LTPS LCD) டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளது. இந்த வகை டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் ப்ரீ ஓஎஸ் (OS ) அப்டேட்டுடன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7050 (Media Tek Dimensity 7050) சிப்செட் வருகிறது. இந்த டேப்லெட் 8 GB RAM + 256 GB மெமரி வேரியண்ட் கொண்டுள்ளது.

அதோடு 1 TB மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கூடுதலாக வருகிறது. இந்த லெனோவா டேப்லெட்டில் 13 MP Selfie Camera வருகிறது. இந்த கேமராவில் ஆர்ஜிபி (RGB) சப்போர்ட் உள்ளது. அதோடு பிளாஷ் லைட்டுடன் கூடிய 8 MP Back Camera வருகிறது.

20W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10200mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை ஃபுல்சார்ஜ் செய்தால், தொடர்ந்து 10 மணி நேரம் வீடியோ பிளேபேக்கை கொடுக்கும். மேலும், பவர் கீ, பிங்கர்பிரிண்ட், மற்றும் சென்சார் (Power Key Fingerprint Sensor), குவாட் ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் (Quad JBL Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது.

அது மட்டுமல்லாமல், ப்ளூடூத் வி5.1 (Bluetooth v5.1), டைப் – சி ஆடியோ (Type-C audio) உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த லெனோவா டேப்லெட் ஓட் (Oat) மற்றும் ஸ்டோர்ம் கிரே (Storm Grey) ஆகிய இரு கலர்களில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த டேப்லெட்டை பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் லெனோவா ஸ்டோர் (Lenovo Store) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

இதன் 8 GB RAM + 256 GB மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.34,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இதைவிட குறைவான பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதன் விற்பனை வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் தொடங்குகிறது. ஒரு லேப்டாப்புக்கு நிகரான அம்சங்களை கொண்ட டேப்லெட் வாங்க வேண்டும் என்றால், இந்த Lenovo P12 Tablet நல்ல தேர்வாக இருக்கும். என்று தற்போது கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply