Leo Advance Booking : லியோ முதல் நாளே 10 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனை

Leo Advance Booking :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’ ஆகும். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் லியோ படத்தை தயாரிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் மூலம் தளபதி விஜய்யின் லியோ படம் இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே மாபெரும் சாதனை படைத்துள்ளது. லியோ உலகம் முழுவதும் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் முன்பதிவு (Leo Advance Booking) நேற்று தொடங்கியது. இங்கிலாந்தில் ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. முன்னதாக அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் விநியோகிக்கப்பட்ட “வாரிசு”, கடந்த ஆண்டு ஜனவரியில் முன்பதிவு செய்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2000 டிக்கெட்டுகள் விற்பனையானது. இந்நிலையில், “லியோ” திரைப்படம் அதை விட அதிகமாக டிக்கெட் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

Leo Advance Booking : இது குறித்து அஹிம்சா எண்டர்டெயின்மென்ட் கூறியது, “லியோவுக்கு முதல் நாளே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்ட பலமான நடிகர்கள் இப்படத்தில் இருப்பதால், ரசிகர்கள் மிகுந்த ஆதரவை அளித்துள்ளனர். இத்திரைப்படம் இங்கிலாந்தில் ஒரு இந்தியத் திரைப்படத்தின் மிகப்பெரிய வெளியீடாகும். மேலும் ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவை உருவாக்கி அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply