Leo Audio Launch Update : 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்

Leo Audio Launch Update :

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்புகள் (Leo Audio Launch Update) வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’ ஆகும். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மிஷ்கின் மற்றும் சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிக்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

லியோ இந்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் ‘நா ரெடி’ விஜய்யின் குரலில் வெளியாகி இன்றும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இப்படம் வெளியாவதற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம் மற்றும் விநியோக உரிமம் மூலம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. லியோ திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. முதலில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை செப்டம்பர் மாதம் மதுரையில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. பின்னர் துபாய் மற்றும் மலேசியாவில் லியோவுக்கு பெரிய நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில், “லியோ” திரைப்படத்தை அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியிடுகிறது. ரிலீஸுக்கு 42 நாட்களுக்கு முன்பே டிக்கெட் விற்பனை தொடங்கியதில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா (Leo Audio Launch Update) வரும் செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகவும் அதற்கான வேலைகளில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பினை கேட்டு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply