Leo Badass Song : லியோ படத்தின் Badass பாடல் வெளியீடு

லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘badass ma, Leo dass ma’ பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை (Leo Badass Song) பெற்றுள்ளது.

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் 2வது பாடலான ‘Badass ma’ பாடலை படக்குழுவினர் (Leo Badass Song) வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் பட வெற்றிக்கு பிறகு லோகேஷ் விஜய் கூட்டணி என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த படம் லோகேஷ் கனகராஜின் LCU யுனிவெர்சில் இணையுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நான் ரெடி’ பாடலை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியிட்டது படக்குழு. அனிருத் இசையில் இந்தப் பாடலை நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இந்தப் பாடல் வரிகள் மதுவை ஆதரிப்பதாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து பாடலில் குறிப்பிட்ட வரிகள் மட்டும் நீக்கப்பட்டது. பின்னர் நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது கதாபாத்திர போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இதனை அடுத்து தொடர்ச்சியாக போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. விஜய் ரசிகர்களால் லியோ இசை வெளியீட்டு விழா பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மேடையில் விஜயின் குட்டி கதையை கேட்க ஆவலுடன் இருந்த ரசிகர்கள் மத்தியில் லியோ இசை வெளியீட்டு விழா திடீரென்று ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலாக ‘Badass’ பாடல் தற்போது (Leo Badass Song) வெளியாகியுள்ளது.

Leo Badass Song :

Leo Badass Song : இந்த பாடல் ஹீரோவின் மாஸை அதிகரிக்கும் துள்ளலான டியூன்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. விஷ்ணு எடவனின் வரிகள் பாடலுக்கு செழுமை சேர்க்கிறது. உதாரணமாக, ‘சிங்கம் எறங்குனா காட்டுக்கு விருந்து, இவன் வேட்டைக்கு சிதறணும் பயந்து’ என ஹீரோவைப் புகழும் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. அனிருத்தின் உற்சாகமான குரல் பாடலின் தரத்தையும் சவுண்டையும் கூட்டுகிறது. இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply