Leo Box Office Collection Day 1 : லியோ படத்தின் முதல் நாள் வசூல்லியோ படத்தின் முதல் நாள் வசூல்

Leo Box Office Collection Day 1 :

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் சர்வதேச அளவில் சிறப்பான முறையில் நேற்று முதல் திரையரங்குகளில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் LCU-இன் கீழ் உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான லியோ சில கலவையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் ஒட்டுமொத்தமாக இப்படம் விஜய் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதன் மூலம் லியோவுக்கு உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. தமிழகம் உட்பட அனைத்து ஏரியாக்களையும் சேர்த்து மொத்தம் ரூ.148.5 கோடி ரூபாய் (Leo Box Office Collection Day 1) வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய்யின் லியோ அவரது 67 வது படமாக நேற்று சர்வதேச அளவில் வெளியானது. இந்த படத்திற்கு முன்பே லோகேஷ்-விஜய் கூட்டணியில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு சர்வதேச அளவில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றிருந்தது. இப்படம் சில கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ஒட்டுமொத்த ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் மட்டுமின்றி பிற மொழி ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர். இப்படம் கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் படத்தின் புரமோஷன் பணிகளும் சிறப்பாக நடைபெற்றன. குறிப்பாக இயக்குனர் லோகேஷ் அடுத்தடுத்து செய்த புரமோஷன்கள் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முன்னதாக கடந்த மாத இறுதியில் நடைபெறவிருந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், படக்குழுவினரின் இந்த புரமோஷன்கள் படத்திற்கு பெரும் ஊக்கத்தை அளித்தன.

இந்நிலையில், ரிலீஸுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக லியோ படம் நேற்று வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்துவிட்டு உலகம் முழுவதும் உள்ள பல ரசிகர்கள் தங்கள் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாமல் தவித்ததையும் காண முடிந்தது. லியோ படம் வெளியாவதற்கு முன்பே பெரும் சர்ச்சையை சந்தித்தது. இதனால் படம் வெளியாவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இந்நிலையில் லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரிலீசுக்கு முன்பே டிக்கெட் விற்பனையில் 46.36 கோடி வசூல் செய்துள்ளதாக (Leo Box Office Collection Day 1) கூறப்படுகிறது. இதற்கு முன் ரஜினியின் ஜெயிலர் படம் முதல் நாளில் ரூ.44.5 கோடி வசூலித்திருந்தது.

இந்நிலையில் விஜய்யின் லியோ படம் ரிலீஸுக்கு முன்பே ஜெயிலரின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை லியோ ஏற்கனவே படைத்துள்ளது. இந்த படம் முதல் நாளிலேயே ரூ.145 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று பாக்ஸ் ஆபிஸ் வசூல் (Leo Box Office Collection Day 1) தகவல்களை வெளியிடும் Sacnilk Entertainment நிறுவனம் அறிவித்திருந்தது.  இந்தியாவில் மட்டும் ரூ.68 கோடி வசூலை கடக்கும் என்றும், முதல் நாளிலேயே சர்வதேச அளவில் இப்படம் ரூ.145 கோடி வசூல் செய்யும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் OTD பிரச்சனையால் வடஇந்தியாவின் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இப்படம் வெளியாகாததால் படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. பாக்ஸ் ஆபிஸ் அறிவிப்பின்படி தமிழகத்தில் லியோ 30 முதல் 35 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. முன்னதாக 40 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. கேரளாவில் 11 கோடியும், கர்நாடகாவில் 14 கோடியும், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 15 கோடியும், மற்ற மாநிலங்களில் 5 முதல் 8 கோடியும் வசூலித்துள்ளது. இதன் அடிப்படையில் லியோவின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இந்தியாவில் மட்டும் 63 முதல் 66 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் லியோ உலகம் முழுவதும் ரூ.148.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக (Leo Box Office Collection Day 1) கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply