Leo Box Office Collection Day 4 : சாதனை படைக்கும் விஜயின் லியோ...

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் ரூ.400 கோடி வசூல் (Leo Box Office Collection Day 4) சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வாசுதேவ் மேனன், த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம், அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 19 ஆம்- தேதி ஆயுதபூஜை பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் வெளியான லியோ திரைப்படம், விஜயதசமி வார இறுதியில் செலோ ரிலீசாக செம ஸ்ட்ராங்காக இடம் பிடித்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை வசூல் தாறுமாறாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று மாலை இண்டஸ்ட்ரி ஹிட் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், அதற்குள் லியோ மிக வேகமாக இண்டஸ்ட்ரி ஹிட் அடித்து விட்டதா? என விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். இந்த ஆண்டு வெளியான வாரிசு, பொன்னியின் செல்வன் 2 திரைப்படங்கள் ரூ.300 கோடி வசூலை தாண்டிய நிலையில், அந்த படங்களின் வாழ்நாள் வசூல் சாதனையை 4 நாட்களில் (Leo Box Office Collection Day 4) முறியடித்து ஜெயிலரின் சாதனையை முறியடிக்க லியோ சென்று கொண்டிருக்கிறது.

லியோ முதல் நாள் வசூல் :

நடிகர் விஜய்யின் 67வது படமான லியோ திரைப்படம் சர்வதேச அளவில் வெளியானது. இந்தப் படத்துக்கு முன்பே லோகேஷ்-விஜய் கூட்டணியில் வெளியான படம் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றது. இப்படம் சில கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ஒட்டுமொத்த ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் மட்டுமின்றி பிற மொழி ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இப்படம் கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் படத்தின் புரமோஷன் பணிகளும் சிறப்பாக நடந்தன. குறிப்பாக இயக்குனர் லோகேஷ் செய்த ப்ரோமோஷன்கள் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படக்குழுவினரின் இந்த புரமோஷன்கள் படத்திற்கு பெரும் ஊக்கத்தை அளித்தன. லியோ திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மற்றும் LCU இன் கீழ் தயாரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் லியோ திரைப்படத்திற்கு உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓப்பனிங்கைக் கொடுத்துள்ளது. தமிழகம் உட்பட அனைத்து ஏரியாக்களையும் சேர்த்து மொத்தம் ரூ.148.5 கோடிகளை முதல் நாளில் வசூலித்தது.

Leo Box Office Collection Day 4 :

உலகளாவிய திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ சேகரிப்பைக் கணித்து வெளியிடும் நிறுவனம்  தான் “காம் ஸ்கோர்” ஆகும். இந்த காம் ஸ்கோர் மதிப்பெண் பட்டியலில் லியோ தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிறுவனம் இதுவரை வெளியிட்ட படங்களில் தமிழ் படம் இதற்கு முன் இடம் பெற்றது கிடையாது. இந்நிலையில் லியோ முதல் முறையாக பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி லியோ திரைப்படம் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leo Box Office Collection Day 4 : இதன்படி லியோ படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் 404 கோடி ரூபாய் (Leo Box Office Collection Day 4) வசூலித்துள்ளது. ஒரு தமிழ் படம் அதிவேகமாக ரூ.400 கோடியை தாண்டியது இதுவே முதல் முறை, ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ஏழு நாட்களில் ரூ.373 கோடி வசூல் பெற்றது சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை லியோ முறியடித்துள்ளது. மேலும் ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி விடுமுறை என்பதால் ரூ. 500 கோடி வசூலைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply