Leo FDFS Booking : நள்ளிரவில் குவிந்த கேரள ரசிகர்கள்...

Leo FDFS Booking :

விஜய் நடித்துள்ள லியோ படம் வரும் 19ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து இந்த படத்திற்கான முன்பதிவு திரையரங்குகளில் (Leo FDFS Booking) துவங்கி விட்டனர். தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில், அதிகாலை 4 மணிக்கு FDFS காட்சி கன்ஃபார்ம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவின் திருச்சூரில் லியோ FDFS டிக்கெட்டுகளை முன்பதிவு (Leo FDFS Booking) செய்வதற்காக விஜய் ரசிகர்கள் அதிகாலையில் திரண்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்-லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் ரிலீஸுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இதனால் விஜய் ரசிகர்கள் Vibe-ல் உள்ளனர். விஜய்-லோகேஷ் கூட்டணி இந்த முறையும் ஒரு தரமான நிகழ்வை செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பே லியோ டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. கோவை, மதுரை, திருச்சி, நெல்லை போன்ற நகரங்களைத் தொடர்ந்து, சென்னையிலும் லியோ முன்பதிவு இன்று தொடங்குகிறது. இதேபோல், தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் சில பகுதிகளிலும் லியோ முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் அதிகாலை 4 மணிக்கு FDFS நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு (Leo FDFS Booking) தொடங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் தமிழக விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் லியோ சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, காலை 9 மணிக்கு லியோ FDFS என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ரசிகர்கள் தமிழகத்தில் அதிகாலை 4 மணிக்கு FDFS-க்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்தனர். இதற்கிடையில், கேரளாவில் லியோ முன்பதிவு கோலாகலமாக தொடங்கியது. தமிழகத்திற்கு அடுத்தபடியாக விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ள மாநிலம் கேரளா. இதுவரை கேரளாவில் வெளியான விஜய் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரும் சாதனை படைத்துள்ளது. இதனால் அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் லியோ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதே சமயம் சில நாட்களுக்கு முன்பு மோகன்லால் ரசிகர்கள் பாய்காட் லியோ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வந்தனர்.

விஜய் ரசிகர்கள் மோகன்லாலுக்கு எதிராக ட்ரோல் செய்ததாகவும் அதனால் லியோ கேரளாவில் புறக்கணிக்கப் போவதாகவும் ட்வீட் செய்து வந்தனர். ஆனால் ஒரு வைரலான வீடியோ அதையெல்லாம் பொய்யாக்கியுள்ளது. கேரளாவில் உள்ள திருச்சூரில் லியோ FDFS காட்சிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. அதை வாங்க நள்ளிரவில் இருந்தே தியேட்டரில் குவிந்த விஜய் ரசிகர்கள், லியோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வரும் நிலையில், லியோ பாக்ஸ் ஆபிஸில் நிச்சயம் வெற்றி பெறும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். விஜய் ரசிகர்களும் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என சவால் செய்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply