
-
Gangers Movie Review: கேங்கர்ஸ் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
TNPSC Group 4 2025 Exam Date Announced : குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு
-
New Rules From May 1st ATM Withdrawal Charges : ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் மே 1-ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Leo First Single Song: விஜயின் அட்டகாச குரலில் வெளியானது லியோ பர்ஸ்ட் சிங்கிள்
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்த லியோ படத்தில் இடம்பெற்றுள்ள “நா ரெடி” பாடலை படக்குழு வெளியிடப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர். குறிப்பாக அந்த போஸ்டரில் அடக்கப்படாத நதிகளில் அமைதியான நீர் தெய்வீக கடவுள்களாக அல்லது பயங்கரமான பேய்களாக மாறும் என குறிப்பிட்டிருந்தது. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டியது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நா ரெடி’ பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.
நா ரெடி பாடல்:
அதன்படி தற்போது முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. ‘நா ரெடி தான் வரவா அண்ணன் நா எறங்கி வரவா’ என்று தொடங்கும் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். அவருடன் இசைமைப்பாளர் அனிருத் மற்றும் பிக்பாஸ் அசல் ஆகியோர் பாடியுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலை உதவி இயக்குனர் விஷ்ணு எடாவன் எழுதியுள்ளார்.
‘நா ரெடி தான் வரவா, என்ற பாடலின் வரிகள் விஜய்யின் அரசியல் வருகையின் அடையாளமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. பாடல் முழுவதும் தர லோக்கலாக பாடியுள்ள விஜய், அவர் தனது கதாப்பாத்திரத்தையே மாற்றப் போகிறார் என கூறும் விதமாக இந்த பாடலின் நோக்கம் அமைந்துள்ளது. பாடலின் மேக்கிங் மற்றும் விஜய் இரண்டாயிரம் பேருடன் நடனமாடும் சில நொடிகள் லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை யூடியூபில் வெளியிட்ட உடனேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் இணையத்தில் இந்த பாடல் வைரலாகி வருகிறது.
மிகுந்த எதிர்பார்ப்பில் லியோ
மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜயின் கூட்டணியில் உருவாகி வரும் படம் லியோ ஆகும். விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அனிருந்த் இசையமைத்துள்ள இப்படத்தில் த்ரிஷா அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கவுதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இதன் மூலம் நடிகை த்ரிஷா 5 வது முறையாக விஜயுடன் இணைந்துள்ளார். இப்படத்தின் டைட்டில் வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.