Leo Movie Review : லியோ திரைப்படத்தின் திரை விமர்சனம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ ஆகும். மேலும் இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இது பற்றிய விமர்சனங்களை (Leo Movie Review) தற்போது நாம் காணலாம்.

லியோ திரைப்படத்தின் மையக் கருத்து

பார்த்திபன் தனது மனைவி சத்யா, மகன் மற்றும் மகளுடன் காஷ்மீரில் ஒரு மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகிறார். ஒரு பக்கம் விலங்கு நல ஆர்வலர், மறுபுறம் காபி ஷாப் தொழிலதிபர் என அமைதியான மனிதராக இருக்கும் பார்த்திபன் தன் குடும்பத்தின் மீது கை வைத்ததால் கொலைவெறி கொண்ட மனிதராக மாறுக்கிறார். அப்படி ஒரு திருட்டு கும்பலுடன் மோதிய பிறகு அவரது புகழ் இந்தியா முழுவதும் பரவுகிறது. தான் செய்த செயலால் தன் குடும்பம் ஆபத்தில் இருப்பதை அறிந்த பார்த்திபன் எதிரிகளிடம் இருந்து தன்னை காக்க நினைக்கிறான்.

அத்தகைய சூழ்நிலையில், கேங்ஸ்டரான ஆண்டனி தாஸ் பார்த்திபனின் புகைப்படத்தைப் பார்த்து, அவரை “லியோ தாஸ்” என்று தவறாக நினைத்து நெருங்குகிறார். தான் லியோ தாஸ் இல்லை என பார்த்திபன் மறுக்க விடாமல் அவரை தான் “லியோ தாஸ்” என்று ஒப்புக்கொள்ள சொல்லி ஆண்டனி தாஸ், பார்த்திபனுக்கு நெருக்கடி கொடுக்கிறார். இந்த குழப்பமான உலகில் லியோ தாஸ் யார்? லியோவை ஆண்டனி தாஸ் தேட காரணம் என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கு “லியோ” திரைப்படம் பதிலளிக்கிறது.

நடிகர்களின் நடிப்பு

விஜய்யை ஆக்‌ஷன் ஹீரோவாக ரசிகர்கள் ஏன் விரும்புகிறார்கள் என்பதைச் சொல்லும் அளவுக்கு அற்புதமாக நடித்துள்ளார். முழுப் படமும் அவரை சுற்றியே நகரும் நிலையில் லியோ, பார்த்திபன் ஆகிய இரு கதாபாத்திரங்களில் வித்தியாசமான முறையில் நடித்து அசத்தியுள்ளார் விஜய். அடுத்ததாக திரையில் மிரட்டும் ஆண்டனி தாஸாக வில்லன் சஞ்சய் தத். இது தவிர, த்ரிஷா, அர்ஜுன், மடோனா செபாஸ்டியன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், அனுராக் காஷ்யப் என பல கதாபாத்திரங்களை கதையின் இயக்கத்திற்கு கச்சிதமாக காய் நகர்த்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Leo Movie Review

Leo Movie Review : லோகேஷ் படம் என்றால் சொல்லவா  வேண்டும். படம் முழுக்க வன்முறை ஆட்டம் தான். பழைய பாடல்கள், மாஸ்டர் படக் குறிப்புகள், முதல் பாதி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், திரைக்கதையின் இரண்டாம் பாதி சற்று சலிப்படைய வைக்கிறது. படத்தின் சிறப்பம்சமே லியோ தாஸின் கதாபாத்திரம் என்றாலும், பெரிய அளவில் அழுத்தமில்லாத க்ளைமேக்ஸ் நெருடலாகவே உள்ளது. லோகேஷ் யூனிவெர்சில் லியோ இணைந்த நிலையில் விஜய்க்கு டஃப் கொடுக்க சஞ்சய் தத், அர்ஜுன் என அதிரடி வில்லன்கள் இருந்தாலும் இவர்களுடனான சண்டைக் காட்சிகள் திடீரென முடிவது ஏமாற்றத்தை கொடுக்கிறது. ஆனால் அடியாட்களுங்கு மணிக்கணக்கில் தளபதி சண்டை போடுவது என்ன நியாயம்..! அதேபோல் த்ரிஷாவுடனான காட்சிகளும் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம். இரண்டாம் பாதியில் இருவருக்கும் இடையே நடந்த நீண்ட உரையாடலில் எந்த அர்த்தமும் இல்லை. மேலும் அனிருத்தின் இசையும், அன்பரின் சண்டைப் பயிற்சியும், மனோஜின் ஒளிப்பதிவும் கச்சிதமாக இருந்தாலும், கதையை இழுத்தடிக்காமல் விரைவாகச் சொல்லியிருந்தால் லியோவை இன்னும் கொண்டாடியிருக்கலாம் என்று ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை (Leo Movie Review) தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply