Leo Poster : லியோ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு...

Leo Poster :

லியோ படத்தின் புதிய போஸ்டர் (Leo Poster) வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதுவரை லோகேஷ் இயக்கிய நான்கு படங்களும் மெகா ஹிட் ஆகியுள்ளது. ஏன் இருவரும் இதற்கு முன் சேர்ந்த மாஸ்டர் படம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், விஜய்யின் முந்தைய படங்களான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக சரியாகப் போகாததால், லியோ படத்தை மெஹா ஹிட் கொடுக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். அவருக்காக லோகேஷும் கடுமையாக உழைத்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. பேட்ச் ஒர்க்கும் முடிந்துவிட்டது. இதனால் படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வரும் என்று கருதப்பட்டது. ஆனால் லியோவின் முதல் சிங்கிள், ஃபர்ஸ்ட் லுக் தவிர வேறு எதுவும் வெளிவரவில்லை. ஆனால் சஞ்சய் தத் க்ளிம்ப்ஸும், அர்ஜுன் க்ளிம்ப்ஸும் அப்டேட் சரவெடியை பற்ற வைத்தன. படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், படத்தின் அப்டேட்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கூறியிருந்தார். மேலும் லியோவின் புரமோஷன் படு பயங்கரமாக இருக்கும் என்றும் த்ரிஷா கூறியது குறிப்பிடத்தக்கது. நிலைமை இப்படி இருக்க, படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ, நேற்று முன்தினம் வெளியிட்ட ட்வீட்டில், இன்றிலிருந்து (நேற்று முன்தினத்தில்) இருந்து முதல் அடுத்த நான்கு நாட்கள் லியோ போஸ்டர் (Leo Poster) வெளியாகும் என தெரிவித்திருந்தது.

அதன்படி நேற்று முன் தினம் லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் (Leo Poster) வெளியானது. காஷ்மீரில் விஜய் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று லியோவின் கன்னட போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் விஜய் கைத்துப்பாக்கிக்குள் இருக்கிறார். மேலும் அந்த போஸ்டரில் Keep Calm And Plot Your Escape என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களிடத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், படத்தின் ஆடியோ வெளியீடு குறித்த தகவலும் சமீபகாலமாக ஓடிக்கொண்டிருந்தது. அதன்படி, லியோ ஆடியோ வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply