Leo Release: தீவிரமாக கண்காணிக்கும் சிறப்பு குழுக்கள்

Leo Release :

லியோ படத்தின் சிறப்பு காட்சிகள் குறித்து தமிழக அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், தற்போது சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரும் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ ஆகும். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் பல ரசிகர் பட்டாளமே நடித்துள்ளது.

லியோ திரைப்படம் வரும் 19 ஆம் தேதி வெளியாகும் (Leo Release) என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது விடுமுறை நாட்கள் வருவதால் அக்டோபர் 24 ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகளை திரையிட தயாரிப்பாளர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில், தற்போது கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லியோவின் காட்சிகள் எப்போது தொடங்க வேண்டும், எப்போது முடியும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரும் இது தொடர்பாக சில முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியதாவது: லியோ திரைப்படம் திரையிட (Leo Release) தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் விதிக்கப்பட்டுள்ள தடையை மீறும் திரையரங்குகளைக் கண்காணிக்க தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் அரசாணை :

Leo Release : ‘லியோ’ தமிழ் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக சில கட்டுப்பாடுகளுடன் கூடிய அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினமும் காலை 9.00 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 01.30 மணிக்குள் 5 காட்சிகள் முடியும் வரை சிறப்பு காட்சி உட்பட 5 காட்சிகள் ‘லியோ’ திரையிட தியேட்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘லியோ’ படத்தை திரையிடும் தியேட்டர் உரிமையாளர்கள், படம் பார்க்க வரும் பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், சீரான போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும். அதிக விலைக்கு டிக்கெட் விற்கக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை கண்காணிக்க சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் அதிரடி :

அதன்படி, 19 முதல் 24 வரை ‘லியோ’ படம் திரையிடப்படும் திரையரங்குகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும், அரசு அனுமதி அளித்துள்ளதால், படம் காலை 09.00 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 01.30 மணிக்குள் முடிக்க வேண்டும். அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்காக, சென்னை காவல்துறையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறும் திரையரங்குகள், அதன் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திரையரங்குகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply