Leo Special Show Update : அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா?

Leo Special Show Update :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதனால் படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாடல்கள் வெளியானது.

அதன் பிறகு சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதையடுத்து லியோ போஸ்டர் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீடு விழா குறித்த தகவலும் சமீபத்தில் வெளியானது. அதன்படி, லியோ ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதையடுத்து இப்படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தை திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு திரையிட அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Leo Special Show Update : முன்னதாக லியோ படத்தை திரையிடுவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இதில் 19 முதல் 24 வரை தினமும் 5 முறை லியோ படத்தை திரையிட திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட காலை 09.00 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 01.30 மணிக்குள் 5 காட்சிகளை திரையிட உத்தரவு (Leo Special Show Update) பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், லியோ படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் மற்றும் பொதுமக்களுக்கு சீரான போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதிக விலைக்கு டிக்கெட் விற்கக்கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், “படத்தின் நீளம் 2 மணி 43 நிமிடங்கள் இருப்பதாகவும், இடைவெளி 20 நிமிடம் என்றும், இரண்டு காட்சிகளுக்கு இடையே கட்டாய இடைவெளி 40 நிமிடங்கள் என்றும் விதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக, காலை 09.00 மணிக்கு தொடங்கி 01.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும், 19.10.2023 அன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சியையும், 19.10.2023 முதல் 24.10.2023 வரை தினமும் காலை 7 மணி முதல் சிறப்புக் காட்சி உட்பட 5 காட்சிகளையும் திரையிட அனுமதி (Leo Special Show Update) கோரியுள்ளது. இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் இன்று விசாரிக்க இருக்கிறார்.

Latest Slideshows

Leave a Reply