Leo Tamil Poster Out : அனல் பறக்க விஜய்யின் லியோ போஸ்டர்...

Leo Tamil Poster Out :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இரண்டாவது முறையாக விஜய்-லோகேஷ் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க, கடந்த மூன்று நாட்களாக லியோ அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது வெளியான லியோ போஸ்டர் (Leo Tamil Poster Out) விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோலிவுட் ரசிகர்களின் மாஸ் ஹீரோவான விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்-லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக லியோவில் இணைந்துள்ளது. அதே சமயம் லோகேஷின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இந்தப் படம் உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், த்ரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் என பெரிய பிரபலங்களுடன் லோகேஷ் களமிறங்கியுள்ளார். இதனால் லியோ படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்தில் இருந்து தினசரி அப்டேட் கொடுக்கும் பணியை படக்குழு செய்து வருகிறது.

துபாயில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற லோகேஷ், லியோ ரிலீஸுக்கு 30 நாட்களுக்கு முன் படத்தின் அப்டேட் வரும். அதன்படி, முதல் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. விஜய் ஆண்டனியின் மகள் மரணம் காரணமாக நேற்று முன் தினம் லியோ அப்டேட் வெளியாகவில்லை. இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் லியோ போஸ்டர் (Leo Tamil Poster Out) திருவிழா தொடங்கியுள்ளது.

அனல் பறக்க விஜய் :

தெலுங்கு மற்றும் கன்னட போஸ்டர்களை தொடர்ந்து லியோ தமிழ் போஸ்டர் (Leo Tamil Poster Out) நேற்று வெளியாகியுள்ளது. வழக்கம் போல் “Keep Calm And Prepare For Battile” என்ற கேப்ஷனுடன் இந்த முறை “மிளக தட்டி முட்டி என்ன குக் பண்றீங்க ப்ரோ என்று கேட்ட அனைவருக்கும் அக்டோபர் 19 அன்று விருந்து” என்று ஒரு மாஸ் அப்டேட் கொடுத்துள்ளது. முக்கியமாக விஜய்யின் ஆக்ரோஷமான லுக் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதுவரை வெளியான போஸ்டர்களில் மாஸ் காட்டிய லியோ டீம், வரும் நாட்களில் இன்னும் தரமான சம்பவங்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply