Leo Third Single : லியோ மூன்றாவது பாடல் | மெலடியாக வெளியானது

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது லியோ படத்தின் மூன்றாவது பாடலை (Leo Third Single) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மிகவும் உணர்ச்சிகரமான குடும்பப் பாடலாக உருவாகியுள்ள இப்பாடல் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. முதல் இரண்டு பாடல்களை அதிரடியாக கொடுத்துள்ள லியோ படக்குழு மூன்றாவது பாடல் (Leo Third Single) மெலடியாக கொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவுபெற்றது. இதனால் படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லியோவின் பாடல்களைத் தவிர வேறு எதுவும் வெளிவரவில்லை.

அதன் பிறகு சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து லியோ போஸ்டர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே படத்தின் ஆடியோ வெளியீடு குறித்த தகவலும் சமீபத்தில் வெளியானது.

அதன்படி, லியோ ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இசை வெளியீட்டு விழாவை பாதுகாப்பு நலன் கருதி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். இதையடுத்து இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Leo Third Single :

வரும் 19ம் தேதி வெளியாகவுள்ள லியோ படத்தின் மூன்றாவது சிங்கிள் (Leo Third Single) தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக ‘நான் ரெடி’ என்ற முதல் பாடல் விஜய் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியும், சில வரிகளும் சர்ச்சையானது. அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர், லியோ தனது இரண்டாவது பாடலான ‘Badass’ பாடலை வெளியிட்டது. இந்த இரண்டு பாடல்களிலும் அனிருத் இசையில் அதிரடி காட்டியிருந்தார். இந்நிலையில் லியோவின் மூன்றாவது பாடலில் அனிருத் கொஞ்சம் அடக்கி வாசித்துள்ளார்.

இதுவரை கத்தியும் கடப்பாரையுமாக வெளியாகிய பாடல்களுக்கு மத்தியில் ஒரு மென்மையான பாடலாக ‘அன்பெனும் ஆயுதம்’ என்ற பாடல் (Leo Third Single) வெளியாகியுள்ளது. இது விஜய், த்ரிஷா மற்றும் இவர்களது மகள் ஆகிய மூவருக்கும் அமைதியான சிறிய வாழ்க்கையை சித்தரிக்கும் வரிகளால் நிறைந்துள்ளது. மேலும் அனைத்து போஸ்டர்களிலும் கொலைகாரனாக காணப்பட்ட விஜய், இந்த பாடலில் முழுக்க முழுக்க கணவனாக மாறியுள்ளார். இந்தப் பாடலை தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Latest Slideshows

Leave a Reply