Leo Trailer Dialogue : விஜய் கெட்ட வார்த்தை பேச நான் தான் காரணம்
Leo Trailer Dialogue :
லியோ படத்தில் விஜய் கெட்ட வார்த்தை (Leo Trailer Dialogue) பேச வற்புறுத்தினேன் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’ ஆகும். இப்படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், சஞ்சய் தத், அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர், கவுதம் மேனன், அனுராக் காஷ்யப், ஜனனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம், ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் என்பதால் இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. லியோ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாளில் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அன்றைய தினம் விஜய்யின் “நான் ரெடி” பாடல் வெளியாகி யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை கடந்தது.
இந்நிலையில் செப்டம்பர் 19ம் தேதி முதல் படத்தின் அப்டேட்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறவிருந்த லியோவின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. படத்தின் 2வது பாடல் “பேட் தாஸ்” வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியோவின் டிரைலர் அக்டோபர் 5 அன்று வெளியிடப்பட்டது. ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளுடன் இடம்பெற்றுள்ள டிரைலரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தைகள் பேசும் காட்சி (Leo Trailer Dialogue) இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். சமூக வலைதளங்களில் விஜய்க்கு எதிராக படக்குழுவினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லியோ படத்தில் விஜய் கெட்டவார்த்தை (Leo Trailer Dialogue) பேசுவதற்கு நான் தான் காரணம் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில், முதலில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். படத்தில் கெட்ட வார்த்தை பேசியது விஜய் அல்ல, அது வெறும் கதாபாத்திரம் அவ்வளவு தான். இந்த காட்சி 6 நிமிடங்கள் ஓடக்கூடியது. இதில் அந்த கேரக்டர் இயலாமை மற்றும் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் பேசுவதாக இருக்கும். விஜய் அந்த வார்த்தை பேசுமுன், அது ஓகே வா நான் பேசலாமா என்று கேட்டார். நான் அவரை பேச வற்புறுத்தினேன். யாரேனும் அந்த வார்த்தையால் அதிருப்தி அடைந்தால் அதற்கு நான் மட்டுமே பொறுப்பு என அதில் லோகேஷ் கூறியிருந்தார். இதன் மூலம் விஜய் மீதான விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
Yoga Benefits : யோகா செய்வதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!
-
International Film Festival 2025 : 23-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச 11-ல் தொடக்கம்..!
-
Madras High Court Recruitment : சென்னை உயர் நீதிமன்றத்தில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?