Leo Trailer Update : மிரட்டலாக வெளியான லியோ அப்டேட்...

Leo Trailer Update :

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் டிரைலர் வெளியீடு (Leo Trailer Update) குறித்த அதிரடி அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்யின் புதிய படமாக ‘லியோ’ உருவாகியுள்ளது. கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் ‘லியோ’ படத்தின் புதிய அப்டேட் (Leo Trailer Update) குறித்த அதிரடியான அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் தொடர் ஹிட் கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ், விஜய் இருவரும் ‘மாஸ்டர்’ படத்தில் இணைந்துள்ளனர். படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாஸ்டர் போல் இல்லாமல் லோகேஷ் கனகராஜ் தனக்கே உரிய பாணியில் லியோவை இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘லியோ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த மாத இறுதியில் நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. ரசிகர்களின் பாதுகாப்பு நலன் கருதி ‘லியோ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இது ரசிகர்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து ‘லியோ’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், படத்தின் அப்டேட் வராததால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்நிலையில் ‘லியோ’ படத்தின் டிரைலர் வெளியீடு (Leo Trailer Update) குறித்து படக்குழுவினர் தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி டிரைலர் வரும் 5ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மிரட்டல் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஹைனாவுடன் விஜய் மோதுவது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இந்த காட்சி படத்தின் வெறித்தனமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர். ‘லியோ’ படத்தில் விஜய்யுடன் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், த்ரிஷா, சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply