Leo Trailer : லியோ படத்தின் டிரைலர் வெளியீடு

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிரைலர் (Leo Trailer) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கு முன் இருவரும் இணைந்த மாஸ்டர் நூறு கோடி ரூபாய் வசூலித்தது. அதுமட்டுமல்லாமல் விஜய் நடித்த பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக சரியாகப் போகாததால் லியோவை மெகா ஹிட் படமாக்க வேண்டும் என்று இப்படத்தில் கடுமையாக உழைத்துள்ளார். இப்பதில் பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. இதனால் படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வரும் என்று கருதப்பட்டது. ஆனால் லியோவின் பாடல்களை தவிர வேறு எதுவும் வெளிவரவில்லை. அதன் பிறகு சஞ்சய் தத், அர்ஜுன் கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் இருந்த நிலையில் படத்தின் அப்டேட்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். மேலும் லியோவின் ப்ரோமோஷன் பயங்கரமாக இருக்கும் என்று திரிஷா கூறியது குறிப்பிடத்தக்கது. அதன்படி படத்திலிருந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் லியோ போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் குறித்த தகவலும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி, லியோ ஆடியோவின் வெளியீட்டு விழா செப்டம்பர் 30-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் பாதுகாப்பது நலன் கருதி இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் டிரைலர் (Leo Trailer) தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Leo Trailer :

தற்போது லியோ படத்தின் டிரைலர் (Leo Trailer) வெளியாகியுள்ளது. பொதுவாக விஜய் படத்தின் டிரைலர் வெளியாகும் போது, ​​ரசிகர்களை மகிழ்விப்பதற்காக திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கின் கார் பார்க்கிங்கில் பிரமாண்ட திரை ஏற்பாடு செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளது. அங்கு அவரது ரசிகர்கள் கொட்டும் மழையிலும் கொண்டாடி வருகின்றனர். 2 நிமிடம் 43 வினாடிகள் ஓடக்கூடிய இந்த டிரைலரில் விஜய் “எவனோ ஒரு (கெட்ட வார்த்தை) என்னை மாதிரி இருக்கான்னு என்ன போட்டு உயிர எடுத்தா நா என்ன டி பண்ணுவ” என த்ரிஷாவிடம் கோபமாக பேசுகிறார். இதை வைத்து பார்க்கையில் ஆக்ஷன், செண்டிமெண்ட் என இரு முகங்களை காட்டியுள்ளனர். டிரைலரில் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் ஒரே இடம்பெறுவது போன்று காட்டப்பட்டுள்ளது. தற்போது டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Latest Slideshows

Leave a Reply