Leo Update : லியோ அப்டேட் சொன்ன அனிருத்

இசைமைப்பாளர் அனிருத் அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் தன்னை இணைத்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த மாதம் வெளியான ரஜினியின் ஜெயிலரில் அனிருத் அருமையான பாடல்களை கொடுத்திருந்தார். இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள ஷாருக்கானின் ஜவான் படத்தின் இசையமைப்பாளரும் அனிருத் தான். இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் தமிழில் 3 படங்கள் மூலம் தன்னை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து கொண்டார். முதல் படத்திலேயே வொய் திஸ் கொலவெறி என மாஸ் பாடலை கொடுத்து சர்வதேச அளவில் ஹிட் ஆனார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் தொட்டதெல்லாம் நன்றாக வருகிறது. விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற வெற்றிப் பட நபர்களுடன் இணைந்து வெற்றிக்குக் காரணமானார். அனிருத் இசையில் ரஜினியின் ஜெயிலர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது. மேலும் அனிருத் BGM-இல் கலக்கிருந்தார். படத்தின் அடுத்த 4 பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமன்னா மற்றும் ரஜினியின் காவாலா பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளைக் இப்போதே கடந்துவிட்டது .

இப்படத்தை தொடர்ந்து அனிருத் இசையில் ஷாருக்கானின் ஜவான் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி போன்ற சூப்பர்ஹிட் நடிகர்கள் நடித்துள்ள அனிருத் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளனர். படத்தின் பாடல்கள் மற்றும் BGM நல்ல வரவேற்பை பெற்றாலும், பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில், அனிருத் அடுத்ததாக விஜய்யின் லியோ படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இசையில் நான் ரெடி பாடல் முதல் சிங்கிளாக வெளியிடப்பட்டது. பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இந்தப் பாடல் வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் இரண்டாவது பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Leo Update :

லியோ படத்தின் அப்டேட் (Leo Update) அடுத்த வாரம் வெளியாகும் என அனிருத் இன்று தெரிவித்துள்ளார். லியோ படத்தின் அப்டேட் அடுத்த வாரம் வெளியாகும் என்றும், இன்று ஜவான் படத்தை திரையரங்குகளில் கண்டு மகிழலாம் என்றும் அவர் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், தற்போது லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அடுத்த வாரம் அதை அறிவிப்பதாகவும் அனிருத் (Leo Update) குறிப்பிட்டுள்ளார். லியோ படத்தின் அடுத்த அப்டேட் வெளியாக உள்ளது. விஜய், அர்ஜுன், சஞ்சய் தத் இவர்களின் பிறந்தநாளையொட்டி வீடியோக்கள், போஸ்டர்கள் மற்றும் முதல் சிங்கிள் ஆகியவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த தகவல் அடுத்த வாரம் வெளியாகும் என அனிருத் கூறியது ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக இருக்கிறது. இந்நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2வது பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply