LEO Villain Yaaru Lyric : லியோ படத்தின் "வில்லன் யாருடா" பாடல் வெளியீடு

LEO Villain Yaaru Lyric :

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் “வில்லன் யாருடா” பாடலின் லிரிக்கல் விடியோவை (LEO Villain Yaaru Lyric) படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் லியோ. அக்டோபர் 19ஆம் தேதி வெளியான இந்தப் படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் படம் தவிர, லோகேஷ் இயக்கும் LCU படங்களுடனும் லியோ இணைந்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாக இருந்தது. அதில் விஜய் கலந்து கொண்டு வழக்கம் போல் குட்டி கதை சொல்லுவார் என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். சில காரணங்களால் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் லியோ படத்தின் ட்ரெய்லருக்காக ஆவலுடன் காத்திருந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் லியோ திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், மலையாளம்,  தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகி தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநில ரசிகர்களையும் லியோ திரைப்படம் கவர்ந்தது. அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. அந்த மாநிலங்களில் விஜய் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டதை பார்த்த ரசிகர்கள், ‘லியோ’ படம் தரமான சம்பவம் என்று கூறினர்.

இதையடுத்து, ‘லியோ’ படம் தமிழகத்தில் காலை 9 மணிக்கு வெளியானது. பல இடங்களில் டிஜே, பேப்பர், பட்டாசு என பலவிதமாக ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். மேலும், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால் அபிஷேகம் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான சேலைகள், தையல் இயந்திரங்கள், அயர்ன்பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டையில் ‘லியோ’ படம் வெளியான தியேட்டரில் ரசிகர் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டனர்.

LEO Villain Yaaru Lyric : இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் லியோ படம் பைரசி தளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் உலகம் முழுவதும் 6000 திரையரங்குகளில் வெளியான ‘லியோ’ திரைப்படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 2023ல் உலகளவில் அதிக வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற சாதனையை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் லியோ படத்தின் வில்லன் யாரு பாடலின் லிரிக்கல் வீடியோவை (LEO Villain Yaaru Lyric) படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ள நிலையில் இசைமைப்பாளர் அனிருத் மற்றும் பின்னணிப் பாடகி சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளனர். இந்த பாடல் (LEO Villain Yaaru Lyric) தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply