பிரபலங்களிடையே மிகவும் பிரபலமடைந்து வரும் “LEXUS LM 350h”

LEXUS நிறுவனத்தின் “LEXUS LM 350h” மாடல் ஆனது இந்திய பிரபலங்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது. இந்தியாவில் சமீப காலமாக கிரிக்கெட் முதல் சினிமா வரை பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் இந்த “LEXUS LM 350h” காரைத்தான் வாங்கி வருகிறார்கள்.

LEXUS LM 350h கார் மாடலை வாங்கியிருக்கும் பிரபலங்கள் :

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடிதான் இந்தக் காரை முதலில் வாங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா இந்தக் காரை வாங்கினார். நடிகர் விஜய் சமீபத்தில் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்றுவிட்டு, இந்த “LEXUS LM 350h” சொகுசு காரை வாங்கி உள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் இந்தக் காரை வாங்கி உள்ளார்.

பிரபலங்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கும் இந்த காரின் Specifications & Features :

  • Engine – 2487 cc engine, 4 Cylinders In V Shape, 4 Valves/Cylinder, DOHC.
  • Engine Type – 2.5 Litres type.
  • Fuel Type – Hybrid (Both Electric + Petrol)
  • Maximum Power – 190 bhp @ 6000 rpm.
  • Maximum Torque – 242 Nm @ 4500 rpm.
  • Max Motor Performance 246 bhp, 270 Nm.
  • இந்த “LEXUS LM 350h” ஆனது மொத்தமாக 14 airbags-ளை பெற்றுள்ளது.
  • 4WD/AWD என்ற DriveTrain அமைப்பை பெற்றுள்ளது.
  • இந்த கார் ஆனது 7 பேர் அமரும் வகையிலான variant மற்றும் 4 பேர் வகையிலான variant என இரண்டு variants-களில் வருகிறது. ஆனால், 4 பேர் அமரும் வகையிலான வேரியன்டையே மக்கள் விருப்பமாக உள்ளது.
  • இந்த காரில் ஒரு தடுப்பு ஆனது முன்பக்க இருக்கைகளுக்கும் மற்றும் பின்பக்க இருக்கைகளுக்கும் இடையே அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பானது ஒரு தனி அறை போன்ற செட்டப்பை தருகிறது.
  • பின்பக்கம் பயன்படுத்தப்பட்டிருக்கும் இருக்கைகளில் Massager மற்றும் Heater போன்ற சிறப்பு வசதிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
  • ஒரு பெரிய திரை ஆனது இந்த காரின் அகலத்திற்கு பின்பக்கத்தில் பொருத்தப்பட்டு உள்ளது.
  • பயணம் செய்பவர்கள் நன்றாக சாய்ந்து கால்களை முழுவதுமாக நீட்டி பெரிய திரையில் படம் பார்த்துக் கொண்டே வசதியாக பயணம் செய்யலாம்.
  • 4 colour options உள்ளது – Sonic Agate, Sonic Titanium, Graphite Black Glass Flake மற்றும் Sonic Quartz வண்ணங்களில் கிடைக்கிறது.
  • இந்த கார் வழக்கமான காரை விட நீளமாகவும், அகலமாகவும் மற்றும் நல்ல இடவசதியோடும் ஒரு மினி வேன் தோற்றத்தில் இருக்கிறது.

LEXUS LM 350h Car Price Details :

இந்த கார் மாடலின்,

  • 7 Seater LEXUS LM 350h variant ரூ.2 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கப்படுகிறது.

ரூ.2.5 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் 4 Seater LEXUS LM 350h variant ஆனது விற்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply