LGM Movie Teaser Release Date: தோனி தயாரிப்பில் உருவான LGM படத்தின் டீசர் இன்று வெளியீடு

தோனி தயாரிக்கும் ”Let’s Get Married” படத்தின் டீசரானது இன்று வெளியாகிறது. உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி கடந்த மாதம் அகமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் மற்றும் சென்னை அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி தனது தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ்த் திரைப்படமான ”Let’s Get Married” படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சினிமாவில் அறிமுகமான மகேந்திர சிங் தோனி, தனது மனைவி சாக்ஷியுடன் இணைந்து தோனி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்தார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்புதான் தமிழில் முதல் படம்.

தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் முதல் படமாக அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகியுள்ள எல்ஜிஎம் (Let’s Get Married) ஆகும். இந்த படத்திற்கு கதையின் நாயகனாக தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். அவருடன் நதியா, லவ் டுடே நாயகி இவானா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் தீபா, ஸ்ரீநாத், விடிவி கணேஷ், வினோதினி வைத்தியநாதன், ஸ்ரீநாத் ஆர்ஜே விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தோனி தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோவை படக்குழு ஏற்கனவே வெளியிட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் என எதிர்க்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி LGM ( Let’s Get Married ) படத்தின் டீஸரை இன்று இரவு 7 மணிக்கு தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியுடன் இணைந்து படத்தின் டீஸரை வெளியிட உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply