LGM Official Teaser: தோனி தயாரித்த 'எல்ஜிஎம்' டீசர் வெளியீடு

தமிழ்நாட்டு மக்களின் தல தோனியாக மஞ்சள் நிற ஜெற்ஸியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இத்தனை ஆண்டுகளாக கேப்டனாக இருந்து 5 முறை வெற்றி கோப்பையை வாங்கி தந்துள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தயாரிக்கும் முதல் படமே தமிழ் படம் தான் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று தான். தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ” Let’s Get Married ” படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

தோனி கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதன் மூலம் திரையுலகிலும் படங்களை தயாரிக்க முன்வந்துள்ளார். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தமிழில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தை தமிழில் ‘Let’s Get Married‘ என்ற பெயரில் தயாரித்தார். அறிமுக இயக்குனர் ரமேஷ் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படத்தில் நடிகை நதியா, யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் விஸ்வஜித் இசையமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் டீஸரை தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இருவரும் இணைந்து வெளியிட்டனர்.

படத்தின் டீசர்

குறைந்த பட்ஜெட்டில் படத்தின் டீசர் நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது. லவ் டுடே மாதிரி ஹிட் ஆகுமா? அல்லது சுமாராக இருக்குமா என்பது திரைக்கதையை பார்த்தால் தெரியும். டீசரை பொறுத்த வரையில் இளைஞர்களை குறிவைத்து இப்படம் உருவாகியுள்ளது. இதில், மிக பிரம்மாண்டமான காட்சி எதுவும் இல்லை என்று தெரிகிறது. இவானா லவ் டுடே படத்தின் காப்பி பேஸ்ட் போல் தெரிகிறது. நதியாவைப் பார்த்தால் M.Kumaran Son Of Mahalakshmi படத்தில் இருப்பது போல் இருக்கிறது. 49 நொடிகளில் வெளியான டீஸரை பொறுத்தவரை படம் காதலை மையமாக வைத்து கலகலப்பான கதையை கொண்டிருப்பதாக உணரமுடிகிறது. டீஸரில் ஹரிஷ் கல்யான், நதியா, இவானா, மிர்ச்சி சிவா, விடிவி கணேஷ், என பெரிய பட்டாளமே வருகிறார்கள். கதாபாத்திர அறிமுகமாகவே டீசர் இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply