Libya Floods : லிபியா வெள்ளத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Libya Floods :

வட ஆப்பிரிக்கா நாடான லிபியாவில் (Libya Floods) ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உயிர் சேதம் குறித்து ஐ.நா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லிபியா மத்தியதரைக் கடல் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. நாட்டின் புகழ்பெற்ற நதியான வாடி டெர்னாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குதான் இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. டெர்னா நகரம், நதி உருவாகும் மலைப் பகுதிக்கும் மத்திய தரைக்கடல் பகுதிக்கும் இடையே அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய தரைக்கடல் பகுதியில் டேனியல் என்ற புயல் உருவானது. அது மெதுவாக நகர்ந்து லிபியாவின் டெர்னாவை குறிவைத்தது.

கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இருப்பினும், லிபியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான ஆட்சி இல்லாததால், உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவில்லை மற்றும் ஏற்கனவே உள்ள கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இந்நிலையில், கனமழை காரணமாக வாடி டெர்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் குறுக்கே இருந்த அணை படிப்படியாக வலுவிழந்து இறுதியில் உடைந்தது. இரு அணைகளும் உடைந்ததால் டெர்ணா நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்காணது மக்கள், வாகனங்கள் மற்றும் வீடுகளை நேரடியாக மத்தியதரைக் கடலில் அடித்துச் சென்றது. இதையடுத்து அண்டை நாடுகள் லிபியாவுக்கு மீட்புப் படைகளை அனுப்பி வைத்தன. முதல் கட்ட மீட்பு நடவடிக்கையில் சில நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலப்போக்கில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியது.

இந்த வெள்ளத்தில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ரெட் கிராஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பல உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை. உடல்கள் நடுக்கடலில் சென்றிருக்கலாம் என மீட்புக்குழுவினர் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், இந்த உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐ.நா. வெளியிட்டுள்ளது. அதாவது இந்த வெள்ளத்தில் 3,958 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஐநா-வுக்கான மனிதாபிமான ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Libya Floods : அதே நேரத்தில், 9,000 பேர் காயமடைந்துள்ளனர் என்று அவர் கூறினார். ஐ.நா. “சரியான எண்களை வெளியிட உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என்று பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் கூறினார். மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள டெர்ணாவில் 1,20,000 பேர் வாழ்கின்றனர். முழு நகரமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். அல்லது சேற்றில் சிக்கி இருக்கலாம் என்று தகவல் வெளியாது. நடமாடும் மருத்துவமனை உள்ளிட்ட உதவிகளை ரஷ்யா வழங்கியுள்ளது. இத்தாலி கடற்படைக்கு சொந்தமான கப்பலை அனுப்பியுள்ளது. அதில் தற்காலிக கூடாரங்கள், தண்ணீர் குழாய்கள், டிராக்டர்கள் போன்றவற்றை அமைப்பதற்கான பொருட்களை அனுப்பியுள்ளது. இதேபோல், மறுபுறம் மீட்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

Latest Slideshows

Leave a Reply