Life2vec : மனிதர்களின் மரணத்தை 78% துல்லியமாக கணிக்கும் AI அடிப்படையிலான இறப்பு கால்குலேட்டரை கண்டுபிடித்துள்ளனர்

மரணத்தை கணிக்கும் பல தொழில்நுட்பங்கள் இருந்தாலும் நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை வைத்தே நம் மரணம் எப்போது என கணிக்கும் புதியவகை AI தொழில்நுட்பம் (Life2vec) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவான (AI) ஆனது கண்டுபிடிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே மனிதர்கள் பயன்படுத்தும் முக்கியமான வேலைகளின் ஒரு பகுதியாக மாறிவருகிறது. அதன் அடுத்த கட்டமாக  மரணத்தை கணிக்கும் AI தொழில்நுட்பங்கள் 2023-ம் ஆண்டின் பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது. AI எப்படி கடந்து வந்துகொண்டிருக்கிறது எந்தெந்த வழிகளில் எல்லாம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதை நாம் தொடர்ந்து பார்த்துவருகிறோம். அதன்முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருப்பது ChatGPT.

செயற்கை நுண்ணறிவின் அடுத்த​க்கட்ட முயற்சியாக டென்மார்க்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (DTU) ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களின் மரணத்தை முன்கூட்டியே கணிக்கும் AI அடிப்படையிலான இறப்பு கால்குலேட்டரை (Life2vec) கண்டுபிடித்துள்ளனர். மேலும் தனிநபர்களின் ஆயுட்காலத்தை முன்கூட்டியே கணிப்பதில் அதிக துல்லிய தன்மை கொண்டதாக இருக்கிறது. மேலும் மற்ற AI மாடல்களைப் போலல்லாமல் அடுத்து என்ன வரப்போகிறது என்பதை நம் அன்றாட வாழ்க்கையில் ஏற்கனவே நடைபெற்ற விவரங்களைப் பயன்படுத்தி சரியாக கணிக்கிறது. டென்மார்க்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழக (DTU) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கும் இந்த AI இறப்பு கால்குலேட்டரின் பெயர் Life2vec. இந்த புதிய ஆராய்ச்சியை அவர்கள் ‘மனித வாழ்க்கையை கணிக்க அவர்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளின் வரிசையைப் பயன்படுத்துதல்’ என்ற தலைப்பில் செய்துள்ளனர்.

Life2vec எனப்படும் மாதிரியானது மற்ற AI தொழில்நுட்பங்களை போல் இல்லாமல் 78% சதவிகிதம் துல்லியமாக மரணத்தை முன்கூட்டியே கணிக்கிறது. ஒருவர் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைக் கணிக்க இந்த தொழில்நுட்பம் எடுத்துக்கொள்ளும் விசயங்கள் தான் புதிதாக இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் நம் மரணத்தை கணிப்பதற்கு நம்முடைய வாழ்வின் அடிப்படையாக இருக்கும் வருமானம், தொழில், குடியிருப்பு மற்றும் உடல்ரீதியான பிரச்சனைகள் போன்ற  விவரங்களை சேகரித்து மரணத்தை கணக்கிடுகிறது.

Life2vec - 6 மில்லியன் மக்களிடம் ஆய்வு :

இந்த Life2vec போட்டை வைத்து டிசம்பர் 2023-ல் ஆய்வில் ஈடுபட்டு வரும் முதன்மை ஆசிரியரான சுனே லெஹ்மான் கூறுகையில் நாங்கள் மனித வாழ்வில் நடந்த நிகழ்வுகளை வைத்து அவர்களுடைய மரணத்தை கணிக்க சாட்ஜிபிடி AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம் என கூறியுள்ளார். இவர்கள் இந்த ஆய்வை கடந்த 2008 மற்றும் 2020-க்கு இடையில் சுமார் 6 மில்லியன் டேனிஷ் மக்களின் மக்கள்தொகையை கணிப்பதில் Life2vec-ஐ பயன்படுத்தியுள்ளனர். வயது வித்தியாசம் மற்றும் பாலினத்தின் அடிப்படையில் யாரெல்லாம் 4 வருடத்திற்கு மட்டும் உயிர்வாழ்வார்கள் என்பதை துல்லியமாக கணித்துள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்கள்.

Life2vec போட்டை பயன்படுத்தும் போது  ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் அவர்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்க எளிய மொழியைப் பயன்படுத்துமாறு AI-ன் குறிப்பிட்ட தகவலை மட்டும் ஆராய்ச்சியாளர்கள் வழங்குகின்றனர். பிறகு விவரங்களை சேகரிக்கும் AI ஆனது ஒவ்வொரு தரவுக்கும் வெவ்வேறு டிஜிட்டல் டோக்கன்களை ஒதுக்குகிறது. பிறகு  குறிப்பிட்ட வகைகளைக் தனியாக குறிக்கிறது. இதன் அடிப்படையில் 2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் யார் எப்போது இறந்துவிடுவார்கள் என்ற தகவலை Life2vec 78% துல்லியமாக கணித்துள்ளது. பங்கேற்பாளர்களுக்கு அவர்கள் எப்போது இறப்பார்கள் என்ற விவரம் வழங்கப்படவில்லை என்பதையும் டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கூறுயுள்ளனர். மேலும் இது யாருடைய பயன்பாட்டிற்கும் இன்னும் வழங்கப்படவில்லை என்பதையும் விளக்கியுள்ளனர்.

Latest Slideshows

This Post Has 2 Comments

  1. Mani

    I like the efforts you have put in this, regards for all the great content.

Leave a Reply