Light House To Poonamallee Metro Operational : Metro ரூட் குறித்து முக்கியமான தகவல்கள்

Light House To Poonamallee வரையிலான Metro ரூட் குறித்து முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது :

சென்னையில் இப்போது மெட்ரோ 2ஆம்  நிலை ரயில் கட்டுமானம் ஆனது படுவேகமாக நடந்து வருகின்றது. இந்த கட்டத்தில் லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் கட்டுமானம் குறித்து முக்கியமான தகவல்கள் (Light House To Poonamallee Metro Operational) வெளியாகியுள்ளது.

மெட்ரோ 2ஆம் ரயில் கட்டுமானம் :

மெட்ரோ 2ஆம்  நிலை கட்டுமானம் ஆனது இப்போது,

  • மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் பூங்கா
  • பூந்தமல்லி முதல் லைட் ஹவுஸ்
  • மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர்

என்று 3 முக்கிய வழித்தடங்களில் 116 கிமீ நீளத்திற்கு நடந்து வருகின்றது. மெட்ரோ 2ஆம்  நிலை கட்டுமானப் பணிகள் ஆனது ரூ.61,843 கோடி மதிப்பில் நடைப்பெற்று வருகிறது.

Light House To Poonamallee Metro Operational :

இரண்டாம் கட்ட மெட்ரோ விரைவில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் முதல் ரூட்டாக லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் ரூட் இருக்கும் (Light House To Poonamallee Metro Operational) என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் இந்த ஹைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வழித்தடத்திற்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து கட்டுமானப் பணிகள் ஆனது வேகமாக நடந்து வருகிறது.  ஏனென்றால் பூந்தமல்லியில் தொடங்கி இந்த ரூட் ஆனது காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், போரூர், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, பவர் ஹவுஸ், கோடம்பாக்கம், பனகல் பார்க், நந்தனம், போட் கிளப், திருமயிலை, லைட் ஹவுஸ் வரை என முக்கிய பகுதிகள் வழியாகச் செல்வதால் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது குறிப்பாக நகரின் மேற்குப் பகுதியில் இருந்து பூந்தமல்லி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிழக்கு நோக்கிப் பயணிக்கும் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமானப் பணிகள் ஆனது படுவேகமாக நடைப்பெற்று வரும் நிலையில், அந்த வழித்தடம் ஆனது படிப்படியாகத் திறக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதன் முதற்கட்டமாக பூந்தமல்லியில் இருந்து போரூர் சந்திப்பு வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடப் பாதை ஆனது 2025 ஆம் ஆண்டு இறுதியில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதும் இந்த ரூட்டில் முக்கியமான ஜங்ஷனாக கருதப்படும் திருமயிலையில் மெட்ரோ சேவை தொடங்கிய ஆரம்ப நிலையில் மெட்ரோ ரயில் ஆனது நிற்காது என்று மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த திருமயிலை மெட்ரோ ரயில் நிலையம் 3 ஆவது மற்றும் 4வது வழித்தடங்களை இணைக்கும் ஒரு சந்திப்பாக அமையும் என்பதால் இந்த மெட்ரோ ஸ்டேஷனை பிரமாண்டமாகக் கட்ட மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளனர். 

திருமயிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அதிக நேரம் எடுக்கும் என்பதால் தொடக்கத்தில் இங்கே ரயில்கள் நிறுத்தப்படாது என்றே மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் கூறுகின்றனர். போரூரில் இருந்து பவர் ஹவுஸ் வரையிலான மெட்ரோ பாதை 2026-இல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து 2027ம் ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான முழு பாதை பொதுமக்கள் செயல்பாட்டிற்காக திறக்கப்படும். முதலாம் கட்ட மெட்ரோவை போலவே இரண்டாம் கட்ட மெட்ரோவையும் படிப்படியாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு ஆனது செய்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply