Lokesh and Shruti Hasan combines in 'Inimeal' :லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணையும் 'இனிமேல்'

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ராஜ்கமலுடன் இணைந்து “இனிமேல்” என்ற மியூசிக் ஆல்பத்தில் இணைந்துள்ளார். ‘இனிமேல்’ என்ற மியூசிக் ஆல்பத்திற்கு கமல்ஹாசன் பாடல்களை எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு ஸ்ருதிஹாசன் கம்போஸ் செய்துள்ளார். இது தொடர்பாக ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மகாநகரம், கத்தி, மாஸ்டர், விக்ரம் என குறுகிய காலத்தில் சிறந்த இயக்குநராக மாறியவர் லோகேஷ் கனகராஜ். விக்ரமின் நடிப்பு அவரது சொந்த ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. படத்தில் லோகேஷ் புதிய உலகத்தை காட்டியிருப்பதால், அதை லோகி யுனிவர்ஸ் என்று சிலர் கொண்டாடி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ்

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யை வைத்து அவர் இயக்கிய படமான லியோ தமிழ் சினிமாவில் எந்தப் படமும் இல்லாத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் லியோ படம்தான் பேசப்பட்டது. இதனால் படத்திற்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதே சமயம் படத்திற்கு எதிர்மறையாகவும் மாறியது. ஏனெனில் இப்படம் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை.

 தற்போது ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, சன்பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. ஏனெனில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்தால் அது வேறு லெவலில் இருக்கும் என அனைவரின் எதிர்பார்ப்பு. ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோரும் நடிக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின் ரஜினி லோகேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

Lokesh and Shruti Hasan combines in 'Inimeal' : ஸ்ருதிஹாசன் லோகேஷ் கூட்டணி

கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் ஸ்ருதிஹாசனுடன் புதிய புராஜெக்ட் ஒன்றை கையில் எடுத்துள்ளது. சமீபத்தில், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதி (Lokesh and Shruti Hasan combines in ‘Inimeal’)சேர்ந்து இருக்கும் போஸ்டர் ஒன்று வெளியிட்டு, அந்த போஸ்டரில் Inimel Delulu is the New Solulu என்ற குழப்பமான தலைப்புடன் ஒரு போஸ்டரை வெளியிட்டனர். இது படமா? அல்லது ஸ்ருதி ஹாசனின் ஆல்பமா, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா? இல்லை நடிக்கிறாரா என கேட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் ஆல்பத்தில் இணைய உள்ளதாகவும் ‘இனிமேல்’ என்கின்ற அந்த மியூசிக் ஆல்பத்திற்கு கமல்ஹாசன் பாடல்களை எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு ஸ்ருதிஹாசன் கம்போஸ் செய்துள்ளார். இது தொடர்பாக ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பங்கு என்ன என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் Introducing லோகேஷ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply