Lokesh Kanagaraj Birthday Celebration: நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். கோவை கிணத்துக்கடவில் 1986ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி பிறந்த இவர் 2016ஆம் ஆண்டு அவியல் என்ற குறும்படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார்.

பின்னர் மகாநகரம் படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கைதியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, லோகேஷ் தனது அடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பை உருவாக்க சினிமாடிக் யுனிவர்ஸ் என்ற கருத்தை உருவாக்கினார். அவரது LCU இல் கைதி, விக்ரம், லியோ போன்ற திரைப்படங்கள் உள்ளன. இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கடைசி படமான லியோ கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அடுத்ததாக இயக்கப் போகிறார் லோகேஷ். அதன்படி தலைவர் 171 என்ற பெயரில் படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கான வசனம் எழுதும் பணியில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

Lokesh Kanagaraj Birthday Celebration:

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். லோகேஷ் பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவர் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது, ஒரு க்ளப்பில் பிறந்தநாள் கேக்கை வெட்டி தனது நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு ஊட்டுகிறார். மேலும், விக்ரம் பட பாடலும், லியோ பட பாடலும் பின்னணியில் ஒலிக்கின்றன. இதேபோல் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் லோகேஷ் கனகராஜ் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் அவரைப் பற்றி விஜய், கமல்ஹாசன் மற்றும் பலர் புகழ்ந்து பேசும் வசனங்களும்; லோகேஷ் படங்களில் மாஸ் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply