Lokesh Kanagaraj Latest Tweet: மாமன்னன் படத்தை புகழ்ந்த லோகேஷ் கனகராஜ்...

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்திற்கு பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ் ஆவார். இவர் ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து, கத்தி, மாஸ்டர், விக்ரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். ஏற்கனவே விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கிய இவர் தற்போது மீண்டும் லியோ படத்தின் மூலம் அவருடன் கைகோர்த்துள்ளார். இப்படத்தில் விஜய்யுடன் மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

மாமன்னன் திரைப்படம் :

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாமன்னன் ஆகும். இப்படத்தில் அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகவும், நடிகர் வடிவேலு அவரது அப்பாவாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும், மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலை வாரி குவித்தது. மாமன்னன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு OTT தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது.

Lokesh Kanagaraj Latest Tweet - லோகேஷ் கனகராஜின் விமர்சனம் :

மாமன்னன் திரைப்படம் ஓடிடி – யில் வெளியான பிறகு பலரும் படத்தை கண்டுகளித்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இந்தப் படத்தை சமீபத்தில் தான் பார்த்திருக்கிறார். மாமன்னன் திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் தற்போது விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் மாமன்னன் மிகவும் அருமையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நான் கருது தெரிவிக்க மிகவும் தாமதமாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மாமன்னன் படம் பார்க்க நன்றாக இருந்தது. படத்தின் அனைத்து துறைகளிலும் நேர்த்தியான வேலைப்பாடு என தெரிகிறது. அதில் இருந்து இன்னும் மீள முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் படத்தில் நடித்ததற்காக உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோரை பாராட்டினார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையையும் அவர் பாராட்டினார். இந்த ட்வீட்டில் ஒட்டுமொத்த மாமன்னன் படக்குழுவிற்கும் ட்வீட்டில் ஃபயர் விட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply