Lokesh Kanagaraj Reveals Thalaivar 171 Update : தலைவர் 171 குறித்து அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் “தலைவர் 171” படத்தை பற்றிய அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj Reveals Thalaivar 171 Update) தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஜெய்பீம் இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தில் சிறப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லால் சலாம்’ படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கேமியோ ரோலில் நடித்தாலும் சூப்பர் ஸ்டார் படமாகவே பார்க்கப்பட்டது. இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Lokesh Kanagaraj Reveals Thalaivar 171 Update :

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘தலைவர்171’ திரைப்படம் உருவாக உள்ளது என ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அது தொடர்பான சில கேள்விகள் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் (Lokesh Kanagaraj Reveals Thalaivar 171 Update) கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தலைவர் 171 படத்தின் கதையை எழுதுகிறேன். நடிகர் ரஜினிகாந்துடன் ஆலோசனை செய்து எழுதுகிறேன். இன்னும் எழுத நிறைய இருக்கிறது. இரண்டு மூன்று மாதங்கள் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் இருப்பதால், என் எண்ணம் முழுவதும் எழுதுவதிலேயே உள்ளது. அதனால்தான் நான் வெளி இடங்களுக்கு செல்லவில்லை. கடந்த ஒன்றரை மாதங்களாக நான் மொபைல் போன் கூட பயன்படுத்துவதில்லை. பலர் என்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள், ஆனால் கனெட்டாக முடியாததற்கு அதுதான் காரணம்” என்றார்.

அதேபோல், லியோ பார்ட் 2 அப்டேட் தொடர்பான கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதில் அளிக்கையில், இதற்கு இன்னொரு நாள் பதில் சொல்கிறேன். இப்போது இந்த திட்டம் தொடர்பான கேள்விகளை மட்டும் கேளுங்கள் என்றார். தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லோகேஷ் கனகராஜ் அளித்த பதிலைப் பார்த்தால் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் எடுக்கும் எனத் தெரிகிறது. படத்தின் முழு ஸ்கிரிப்டும் தயாரான பிறகு படத்தின் பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்துக்கான படம் என்பதால், திரைக்கதை அவருக்கு விருப்பப்படி மாஸாக இருக்க வேண்டும் என்பதாலும் இந்த கால அவகாசம் எடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Latest Slideshows

Leave a Reply