Lokesh Kanagaraj Watch Leo With Fans : ரசிகர்களுடன் லியோ படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ்

Lokesh Kanagaraj Watch Leo With Fans :

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ரசிகர்களுடன் (Lokesh Kanagaraj Watch Leo With Fans) லியோ படத்தைப் பார்க்க வெற்றி தியேட்டருக்கு வந்தனர்.

லியோ :

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ ஆகும். இந்த த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அனுராக் காஷ்யப், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. ரத்னகுமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளனர். விஷ்ணு எடவன் பாடல்களை எழுதியுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நேற்று வெளியாகி உள்ளது. பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் நேற்று காலை 9 மணி முதல் முதல் காட்சி தொடங்கப்பட்டது. திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே நீடித்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழகம் முழுவதும் மொத்தம் 900 திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ரசிகர்களுடன் படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெற்றி தியேட்டர் :

பொதுவாக படக்குழுவினர் ரோகினி திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்ப்பது வழக்கம். சமீபத்தில் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின் போது, ​​கூட்டம் அதிகமாக இருந்ததால் தியேட்டர் டிக்கெட்டுகள் சேதமடைந்தன. இதையடுத்து ரோகினி திரையரங்குகளில் லியோ திரைப்படம் திரையிடப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் கலக்கமடைந்தனர். நேற்று முன் தினம் சென்னையில் லியோ படத்திற்கான செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், வெற்றி திரையரங்கில் (Lokesh Kanagaraj Watch Leo With Fans) படத்தை பார்க்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் படத்தின் நாயகி த்ரிஷா நேற்று தனது தாயாருடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து ‘லியோ’ படத்தை பார்த்து ரசித்தார். லோகேஷ் கனகராஜ் அறிவித்தபடி, லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் முதல் காட்சியை (Lokesh Kanagaraj Watch Leo With Fans) பார்த்து ரசித்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் அவரை பார்த்ததும் உற்சாகத்தில் கூச்சலிட்டனர். வெற்றி திரையரங்கில் முதல் காட்சியை பார்த்துவிட்டு ரோகினி தியேட்டருக்கு வந்தனர். அப்போது அனிருத் அங்கு ஒரு பாடல் பாடி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இது சம்மந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply