Louis Braille : உலக பார்வையற்றோருக்காக எழுத்துமுறையை உருவாக்கிய பிரெய்லியின் கதை
கண் பார்வை இல்லாதவர்கள் என்றாலே பொதுவாக இரயிலில் பாட்டுப் பாடி பிச்சை எடுப்பார்கள், இல்லை என்றால் கோயில் வாசலில் அமர்ந்து கையேந்துவார்கள் என்ற பொதுவான எண்ணம் ஒரு காலத்திலிருந்தது. பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்குக் கல்வி கற்றுக்கொள்ள எந்த வழியும் அந்தக்காலத்தில் இருக்கவில்லை. வாய் பேச முடியவில்லை என்றாலோ, செவிப்புலன் திறன் இல்லை என்றாலும் அவர்கள் சைகை மொழி மூலமாக ஏதாவது ஒன்றைத் தெரிந்துகொள்ள முடிந்தது. மேலும் கண் பார்வை இல்லை என்றால் கல்வி என்பது கனவில் கூட சாத்தியமில்லாத ஒன்றாகிப் போயிருந்தது. அப்போது எல்லாம் விரல்களைவிட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே பார்வைக் குறைபாடு எனும் பெருந்தடைகளை தாண்டி வாழ்க்கையில் சாதித்துக் காட்டினார்கள்.
பார்வையற்றோருக்காக அவர்களின் வாழ்க்கை மேம்பாடு குறித்த ஆய்வுகளோ, ஆராய்ச்சியோ எதுவுமே அக்காலத்தில் இருக்கவில்லை. இப்படி பார்வைக் திறன் குறைபாடு உள்ளவர்களின் எதிர்காலமே விடை தெரியாமல் கேள்விக்குறியாக இருந்த சமயத்தில், அவர்களின் இருண்ட உலகத்தை ஒளிக்கீற்றாக மாற்ற ஒருவர் வந்தார் அவர்தான் Louis Braille.
இளமைக்காலம் - House Of Louis Braille :
Louis Braille பிறந்த வீடு ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சு தேசத்தில் 1809-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி பிறந்த லூயிஸ் பிரெய்லியின் தந்தை சைமன் ரெனே, குதிரைகளுக்கான லாடங்களையும், அதற்கு தேவையான தோலால் ஆன பிற பொருள்களையும் தயாரிக்கும் வேலை செய்து வந்தார். பிரெய்லியின் தந்தை வைத்திருந்த துளையிடுவதற்கும், செதுக்குவதற்குமான கருவிகளை குழந்தை பிரெய்லிக்கு விளையாட்டுப் பொருள்களாகவும் மாறின.
பிரெய்லியின் பார்வை இழப்பு நிகழ்வு :
தினமும் தன்னுடைய தந்தையின் பட்டறைக்குச் செல்லும் Louis Braille, அவற்றை வைத்து எப்போதும் விளையாடிக் கொண்டிருப்பார். ஒருநாள் விதி அவரது வாழ்க்கையில் மிக மூர்க்கத்தனமாக விளையாடியது. விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை பிரெய்லியின் கண்களைக் கூரான குத்தூசி ஒன்று எதிர்பாராதவிதமாகக் குத்திவிட ஒரு கண்ணின் பார்வைதிறனை இழந்தார் பிரெய்லி. அப்போது அவருடைய வயது மூன்று (3). பிரெய்லி அவர்களின் பாதிக்கப்பட்ட கண்ணைக் குணமாக்க பல முயற்சிகள் நடந்தன. ஆனாலும் அன்றைய காலகட்டத்தில் பெரிய அளவில் மருத்துவ வசதிகள் வளர்ச்சியடையாத காரணத்தினால் சிகிச்சை பலனின்றி அவருடைய மற்றொரு கண்ணிலும் பார்வை திறனானது பறிபோனது. குழந்தை பிரெய்லி தன் பார்வை முழுவதையும் இழந்த போது அவரது வயது வெறும் ஐந்து (5) .
பார்வையற்றோருக்கான முதல் பாடசாலை :
பிரெய்லி அவரின் தந்தை தன் குழந்தை பார்வையை இழந்துவிட்டதே எனத் துவண்டு போகாமல், அவரை பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ‘Royal Institute For Blind Youth’ என்ற இளம் பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்த்தார். அப்போது உலக அளவில் பார்வை இல்லாதவர்களுக்காக இருந்த ஒரே பாடசாலை அது மட்டுமே. அந்தச் மோசமான சம்பவம் தான் பிரெய்லியின் வாழ்வில் மட்டுமல்ல, பின்னாளில் உலகில் உள்ள அத்தனை பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் வாழ்விலும் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது.
தொடக்கக் காலத்தில் இருந்த பிரெய்லி முறை :
“Royal Institute For Blind Youth” என்ற கல்வி நிறுவனத்தை உருவாக்கிய ‘வேலென்டின் ஹாவி’ என்பவர் அவருக்குத் தெரிந்த விதத்தில் கண் பார்வை இழந்தவர்கள் படிப்பதற்காக ஒரு எழுத்து முறையை ஏற்கெனவே உருவாக்கியிருந்தார். ‘வேலென்டின் ஹாவி’ எழுத்து முறையின்படி லத்தீன் எழுத்துகளைக் கடினமான தாளில் புடைப்புருக்களாக அமைத்து, மறுபக்கமாக அவற்றைத் தொடுவதன் மூலம் எழுத்துகளைப் புரிந்துகொண்டு படிக்குமாறு சில நூல்களைத் தயார் செய்து வைத்து இருந்தார். மொழிகள், இலக்கியம், இலக்கணம், இசை, கணிதம், அறிவியல் என அனைத்தும் இந்த எழுத்து முறையிலேயே கற்பிக்கப்பட்டன. ஆயினும் இம்முறையானது பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருந்தது.
நவீன பிரெய்லி முறை :
தான் கற்ற கல்வி முறையிலிருந்த குறைபாடுகள் லூயிஸ் பிரெய்லியை உறுத்திக்கொண்டே இருந்தது. இதற்கான மாற்றுவழிகளைக் கண்டுபிடிப்பதிலேயே பிரெய்லி அவரின் சிந்தனை நித்தம் மையல் கொண்டு கிடந்தது. இதற்காக இரவும் பகலுமாக பாடுபட்டு ஆராய்ச்சியில் இறங்கிய Louis Braille, புள்ளிகளைப் பல விதமாக மாற்றி அமைத்து, பரிசோதனைகள் செய்து ஒரு புதிய வகை குறியீட்டு மொழியை உருவாக்கினார்.
மொத்தம் ஆறே புள்ளிகளை மட்டும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அந்த எழுத்து முறையில் மொழி, இலக்கணம், கணிதம், அறிவியல் கோட்பாடு, வரலாறு, புவியியல், இசைக்குறிப்பு, கதை, கட்டுரை, நாவல் என எல்லாவற்றையும் எழுதவும் செய்யலாம், படிக்கலாம் என்பதையும் அவரது 15-வது வயதிலேயே நிரூபித்துக் காட்டினார். எந்தக் குத்தூசி தன் பார்வை திறனை பறித்ததோ, அதே குத்தூசியைக் வைத்தே ஆறு புள்ளிகளின் அட்சரத்தை உருவாக்கினார் பிரெய்லி. அந்த ஆறு புள்ளிகளும் கோடுகளுமே பின்னாளில் அவரைப் போலவே பல கோடி பார்வைச் சவால் உள்ளவர்களின் பார்க்கும் இரு கண்களாக மாறின.
பிரெய்லி முறை நிராகரிப்பு :
மேலும் லூயிஸ் பிரெய்லியின் இந்த ஒற்றை விரல் புரட்சியை (எப்போதும் போலவே) அன்றைய உலகம் அவ்வளவு சீக்கிரமாக ஏற்றுக்கொள்ளவில்லை. லூயிஸ் பிரெய்லியின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. ஆனால் அதற்காக எல்லாம் பிரெய்லி அவர் தளர்ந்து போகாமல் மேலும் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.
பார்வைத்திறன் குறைபாடு என்பது மட்டுமே ஒருவனின் வாழ்க்கையில் வளர்ச்சிக்கான முற்றுப்புள்ளியாக இருந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் Louis Braille. பிரெய்லியை எலும்புருக்கி மற்றும் ஆஸ்துமா நோய்களால் 1852-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி, தனது 43-வது வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரெய்லியின் அவர்களின் மறைவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அவரின் அனைத்து கண்டுபிடிப்புகள் பிரெஞ்ச் அரசால் அங்கீகரிக்கப்பட்டன.
இன்றைய உலகில் பிரெய்லி முறை :
1932-ம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் ‘பிரெய்லி ஆங்கில எழுத்து முறை’ அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று மொத்தமாக 133 மொழிகளுக்கு மேல் பிரெய்லி குறியீடுகள் உள்ளன. தொழில்நுட்பம், கணிதம், அறிவியல், அரசியல், சட்டம், மருத்துவம், கைத்தொழில் என அத்தனை பாடத்திட்டங்களும் பிரெய்லி எழுத்து மூலம் கற்பிக்கப்பட்டு, வருடம் தோறும் பார்வைதிறன் அற்ற இலட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுகிறது.
Latest Slideshows
-
TN Cabinet Approves Space Industry Policy 2025 : விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
-
Good Friday 2025 : புனித வெள்ளி வரலாறும் கொண்டாட்டமும்
-
India First Archaeological Documentary Film : இந்தியாவின் முதல் தொல்லியல் ஆவணப்படம் பொருநை வெளியீடு
-
Patel Brothers Have Built A Business In USA : அமெரிக்காவில் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள பட்டேல் பிரதர்ஸ்
-
Chat GPT Push Back Instagram And TikTok : இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் சாதனங்களை பின்னுக்கு தள்ளிய சாட் ஜிபிடி
-
MI Won The Match Against Delhi : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றிபெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி
-
TN Medical College : தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைவதாக அறிவிப்பு
-
Ambedkar Jayanti 2025 : அம்பேத்கர் ஜெயந்தி முக்கியத்துவமும் கொண்டாட்டமும்
-
TN Sub-Inspector Recruitment 2025 : தமிழக காவல்துறையில் 1299 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Box Office : குட் பேட் அக்லி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்