Lover Movie Censor Report : லவ்வர் படத்தில் ஆபாச வார்த்தைளை நீக்க சென்சார் போர்ட் வலியுறுத்தல்

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் படத்திற்கு தணிக்கை குழு பல இடங்களில் கத்திரிப்போட்டு தூக்கி (Lover Movie Censor Report) உள்ளது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். காலா படத்தில் ரஜினியின் மகனாக நடித்தார். இந்தப் படத்தில் நடித்து ஓரளவுக்கு பெயர் பெற்ற மணிகண்டன், ஜெய் பீம் படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தற்போது நல்ல கதையை தேடிக்கொண்டிருக்கும் மணிகண்டன் சமீபத்தில் குட்நைட் படத்தில் நடித்தார். விநாயக் சந்திர சேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பெரிய ஹீரோக்களின் படங்கள்தான் தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்ற நிலையை மாற்றி, தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கை தரும் படமாக அமைந்தது குட் நைட் படம்.

லவ்வர் :

குட் நைட் திரைப்படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தற்போது லவ்வர் படத்தை தயாரித்துள்ளன. இந்த படத்தை பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ளார். இப்படத்திலும் மணிகண்டன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மாடர்ன் லவ் ஆந்தாலஜி தொடரின் மூலம் பிரபலமான ஸ்ரீகெளரி பிரியா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், நடிகர் கண்ணரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ்குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், பரத் விக்ரமன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் காதலன் காதலி பிரிவினையும் சண்டையும் முதன்மையாக வைத்து காட்சியளிக்கிறது. பெரும்பாலான தமிழ்ப் படங்களைப் போலவே இந்தப் படத்திலும் ஹீரோ காதலில் விழுகிறார். காதலி டாட்டா செல்வது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

Lover Movie Censor Report :

லவ்வர் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் இரண்டிலும் முன்னணி நடிகர் மணிகண்டன் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இந்த வசனங்கள் கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்றவாறு முன்வைக்கப்பட்டுள்ளன என்ற கருத்து ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. இந்நிலையில், லவ்வர் திரைப்படத்தில் உள்ள ஆபாச வார்த்தைகளை நீக்கவோ அல்லது முடக்கவோ தணிக்கை வாரியம் கோரிக்கை (Lover Movie Censor Report) விடுத்துள்ளது. லவ்வர் படத்தில் சில ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக சென்சார் போர்டு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று இடங்களில் மட்டும் மயிறு என்ற வார்த்தையை பயன்படுத்த படக்குழுவினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் வார்த்தைகளை மியூட் செய்ய உத்தரவிட்ட சென்சார் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் (Lover Movie Censor Report) வழங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply