Lover Review : லவ்வர் திரைப்படத்தின் திரைவிமர்சனம்

மணிகண்டன் நடிப்பில் வெளியாகியுள்ள லவ்வர் திரைப்படத்தின் திரை விமர்சனம் (Lover Review) குறித்து தற்போது பார்க்கலாம். லிவ்வின் வெப்சீரிஸ் மூலம் பிரபலமான பிரபுராம் வியாஸ் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்த லவ்வர் படத்தை இயக்கியுள்ளார். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஃபிலிம்ஸ் மீண்டும் இந்தப் படத்தில் மணிகண்டனை வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளது. மணிகண்டன், ஸ்ரீகெளரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான குட் நைட் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ‘லவ்வர்’ திரைப்படத்திற்கு அதே வெற்றி கிடைக்குமா என்பதை இந்த விமர்சனத்தில் (Lover Review) விரிவாக பார்க்கலாம்.

படத்தின் மையக்கருத்து :

இன்றைய இளம் வயதினருக்கிடையே காதல், மோதல், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என அனைத்தையும் கலந்த திரைப்படம் “லவ்வர்”. ஒரு துணையின் மீது இருக்கும் அழகான அன்புக்குப் பதிலாக அவர்கள் மீதான பயத்தால் உறவில் ஏற்படும் பிரச்சனைகளை படம் பேசுகிறது. கல்லூரிப் படிப்புக்குப் பிறகு சொந்தமாகத் தொழில் செய்ய வைத்திருந்த பணத்தையெல்லாம் இழந்து வரும் அருணுக்கு (மணிகண்டன்) தொழில் தொடங்க முடியாத விரக்தி அவனைக் கோபக்காரனாக மாற்றுகிறது. அவர் திவ்யாவை (ஸ்ரீ கௌரி பிரியா) காதலிக்கிறார். விரக்தி, கோபம் அனைத்தையும் காதலியின் மீது காட்டுவதால், காதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாத நிலை எழுகிறது. மேலும் அந்த காதல் பயமாக மாறுகிறது. இதனால், எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்கின்றன. இந்த சூழ்நிலையை அருணால் நன்றாக கையாண்டு தன் காதலில் வெற்றி பெற்றாரா என்பதே லவ்வர் படத்தின் கதையாகும்.

Lover Review :

மணிகண்டன், கௌரிப் பிரியா, கண்ணா ரவி, நிகிலா ஷங்கர், ஹரிஷ் குமார், ஹரிணி உள்ளிட்ட கதாபாத்திரங்களைச் சுற்றி லவ்வர் படம் நகரும் நிலையில், அனைவரும் சிறப்பாகப் பங்களித்துள்ளனர். மணிகண்டன்-கௌரி பிரியா கதாபாத்திரங்கள் இக்கால காதலர்களை கச்சிதமாக பிரதிபலிக்கின்றன. இன்றைய சூழலில் இப்படியொரு உறவுச் சிக்கல் கதையை கையில் எடுத்து தனது முதல் படத்தின் மூலம் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பிரபு ராம் வியாஸ்.

மேலும், கெஞ்சுவதும், விட்டுக் கொடுத்துக் கொண்டே செல்வது மட்டும் காதல் அல்ல. காதல் என்றென்றும் காதல்தான். அதன் புரிதல் தான் எப்படிப்பட்ட காதல் என்பதை வெளிப்படுத்துகிறது என்பதை சரியான க்ளைமேக்ஸ் காட்சி காட்டுகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் படம் பார்க்கும் போது அந்த கேரக்டர்களாகத் தங்களைப் பார்க்கும் அளவுக்கு படம் முழுக்க ஒரு பதற்றத்தையே உருவாக்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். படத்தின் நீளம் மிகப்பெரிய மைனஸ் ஆக உள்ளது. எடிட்டிங்கில் சில காட்சிகள் வெட்டப்பட்டிருக்கலாம். ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் பாடல்களும், ஸ்ரேயா கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் கவனிக்க வைக்கிறது.

ஒவ்வொரு நாளும் நம்மைச் காதலிப்பவர்களை காண்கிறோம். அவர்களுக்கிடையேயான பிரச்சனைகளை தீர்த்து வைக்க கேட்கிறோம். தவறான புரிதலால் ஏற்பட்டதா அல்லது காதலித்தவர்கள் தவறாக ஜோடியாகிவிட்டதா என்ற குழம்பி போயிருப்போம். காதலர்கள் தங்களுக்குள் பிரச்சனைகள் வரும்போது முடிவெடுக்கத் தவறும் இடத்தில், அதன் விளைவுகள் வேறுவிதமாக இருக்கும். அதைச் செய்யாமல் சரியான க்ளைமாக்ஸோடு படத்தை முடித்துவிட்டார்கள். ஆக மொத்தத்தில் லவ்வர் திரைப்படத்தை காதலிப்பவர்களும், சிக்கலான காதலில் இருப்பவர்களும் தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.

Latest Slideshows

Leave a Reply