Low Pressure Area Will Form In Tomorrow : வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி (Low Pressure Area Will Form In Tomorrow) உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி வருவதால் வரும் டிசம்பர் 16-ம் தேதி முதல் தமிழகத்திற்கு மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது கடந்த அக்டோபர் மாதம் துவங்கி தற்போது வரை மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ததால் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் பிறகு தமிழகத்தில் சில நாட்கள் மழை பெய்யாமல் இருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு (Low Pressure Area Will Form In Tomorrow) பகுதி உருவானது. இது டிசம்பர் 10-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதால் டிசம்பர் 11, 12-ம் தேதிகளில் சென்னையில் மீண்டும் பரவலாக மழையும், தமிழகத்தின் தென் மாவட்டங்களான தஞ்சாவூர், தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழையும் பெய்து வருகிறது. மேலும் இன்று இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி (Low Pressure Area Will Form In Tomorrow)

இந்நிலையில் தான் வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, தெற்கு அந்தமான் வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் (டிசம்பர் 14) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் (Low Pressure Area Will Form In Tomorrow) இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையை நோக்கி வருவதால் தமிழகத்தில் வரும் டிசம்பர் 16-ம் தேதி ஓரிரு இடங்களில் மிதமான மழையும், 17-ம் தேதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply