LPG Gas Cylinder Price : சிலிண்டர் விலை குறைப்பு...

LPG Gas Cylinder Price :

மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதிரடியாக குறைத்த நிலையில் இது ‘இந்தியா’ கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு செயல்தலைவர் ஸ்டாலின் அளித்த பதிலால், மக்களுக்கு அடுத்த ஜாக்பாட் அடிக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பா.ஜ.க.வை தோற்கடிக்க, ‘இந்தியா’ என்ற பெயரில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று நடைபெற உள்ளன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ‘இந்தியா’ கூட்டணி சின்னம் வெளியிடப்படும் என்றும், கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.கவும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு (LPG Gas Cylinder Price)  சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.200 குறைத்துள்ளது. மேலும் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் ஏற்கனவே ரூ.200 குறைக்கப்பட்டு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் நிலையில் மேலும் ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு (LPG Gas Cylinder Price) சிலிண்டருக்கு ரூ.400 குறைந்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு சமையல் கேஸ் சிலிண்டர் விலையை குறைத்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும், நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி பயம் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பிரதமர் மோடி குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தற்போது விவாதத்தில் உள்ளது.

இந்நிலையில் தனது சொந்த தொகுதியான சென்னை கொளத்தூர் திருவிக நகரில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு செயல்தலைவர் ஸ்டாலின் (LPG Gas Cylinder Price) அறிவுறுத்தினார். இதனிடையே சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு குறைத்தது குறித்து செயல்தலைவர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து, செய்தியாளர் ஒருவர், “சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு, ‘இந்தியா’ கூட்டணிக்கு நெருக்கடியா?” என கேள்வி எழுப்பினார். இதற்கு, செயல்தலைவர் ஸ்டாலின், ”Gas Cylinder விலை குறைப்பு, தேர்தல் நெருங்கி வருவதற்கான அறிகுறி. பெட்ரோல், டீசல் விலை குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ‘இந்தியா’ கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்றார்.

Latest Slideshows

Leave a Reply