கவனம் ஈர்க்கும் யோகிபாபுவின் Lucky Man First Look Poster
யோகிபாபு நடிக்கும் நடிக்கும் லக்கி மேன் படத்தின் முதல் போஸ்டர் (Lucky Man First Look Poster) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காமெடியனாக திரைஉலகிற்கு அறிமுகமாகி வந்து பல நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். விஜயின் வாரிசு படத்திற்கு பிறகு யோகிபாபு நடிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொம்மை நாயகி’ இதில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதையை இயக்குனர் ஷான் எழுதி இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக சுபத்ரா நடித்துள்ளார். யோகிபாபுவிற்கு மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய யோகிபாபு, இந்த படத்தில் இயக்குனர் ஷாம் என்னை காமெடி பண்ண விடவே இல்லை. பா.ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது திடீரென 20 நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். அந்த சமையத்தில் நான் சுந்தர்.சியின் கலகலகப்பு படத்துக்காக தேதிகள் கொடுத்திருந்ததால் அந்த வாய்ப்பு கிடைக்க வில்லை. ஆனால் பரியேறும் பெருமாள் படத்தின் மூலமாக நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிப்பதற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். இந்த படமானது அப்பா மகள் கதை என்பதால் ஒரு அப்பாவின் வலி என்ன என்பதை இந்த படத்தின் மூலமாக உணர்ந்தேன். சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்து எவ்வளவோ அவமானங்களை தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். நான் எப்பவுமே காமெடி நடிகன் தான் என்று யோகிபாபு கூறினார். இந்த ‘பொம்மை நாயகி’ பிப்ரவரி 3 ஆம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து ‘லக்கி மேன்’ என்ற படத்தில் கதை நாயகனாக நடிக்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதை கண்டறியும் ஒரு மனிதனின் வாழ்க்கையை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் முடிவடைந்து உள்ள நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து வெளியான போஸ்டர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் இந்த படத்திற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.