Lucky Man Movie Review : லக்கிமேன் திரைப்படத்தின் விமர்சனம்

வாழ்க்கையில் எப்போதும் ‘லக்’ என்றால் என்னவென்றே தெரியாத ஒருவனுக்கு திடீரென ஒரு ‘லக்’ அடித்து பின் அதுவும் ‘பக்’ ஆகிப் போனால் என்ன நடக்கும் என்பதுதான். இந்த ‘லக்கிமேன்’ படம் கொஞ்சம் சீரியஸ், நகைச்சுவை, கொஞ்சம் யதார்த்தம் கலந்து படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால் அவர்கள்.

படத்தின் கதை :

சிறு வயதிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாதவர் முருகன் (யோகிபாபு). அவர் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனியில் கமிஷன் ஏஜன்ட்டாக வேலை பார்த்து வருகிறார். மனைவி, ஒரு மகன் என வாழ்க்கை படம் முழுவதும் சுமாராகப் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு சீட்டு கம்பெனியில் அவருக்கு குலுக்கலில் முறையில் ஒரு கார் பரிசாக விழுகிறது. அந்த காரை யோகிபாபு அவர்கள் வைத்து ரியல் எஸ்டேட்டில் கூடுதலாக சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். இந்நிலையில் அந்தக் கார் திடீரெனக் காணாமல் போகிறது. யோகிபாபுவுடனான ஒரு சின்ன மோதலில் இன்ஸ்பெக்டரான வீரா (சிவக்குமார்) அந்தக் காரை எடுத்து மறைத்து வைத்துக் கொள்கிறார். காணாமல் போன கார் யோகிபாபுவுக்குக் கிடைத்ததா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

‘மண்டேலா’ படத்திற்குப் பிறகு யோகிபாபு அவர்களின் நடிப்பை அழுத்தமாய் வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரம் தான் இந்த லக்கிமேன் திரைப்படம். பொறுப்பான கணவனாக, அப்பாவாக தனது கதாபாத்திரத்தில் இயல்பாய் நடித்திருக்கிறார் யோகிபாபு. அவருக்குள் இருக்கும் காமெடி உணர்வுகளையும் மீறி குணச்சித்திர உணர்வுகள் நிறைய ஒளிந்து கிடக்கிறது என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் போது நமக்கு மேலும் புரிகிறது.

Lucky Man Movie Review :

Lucky Man Movie Review : படத்தில் யோகிபாபுவின் மனைவியாக வரும் தெய்வானை (ரெய்ச்சல் ரெபேக்கா) அவர்கள் சினிமாத்தனமில்லாத ஒரு மனைவி கதாபாத்திரம். கணவனை நன்றாக புரிந்து வைத்திருப்பவர் ஒரு கட்டத்தில் யோகிபாபு அவரை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் ஏற்புடையதாக இல்லை. யோகிபாபுவின் மகனாக நடித்திருக்கும் சிறுவனும் படம் முழுவதும் நிறைவாய் நடித்திருக்கிறார்.

படம் முழுவதும் யோகிபாபுவுடனேயே இருக்கும் நண்பன் கதாபாத்திரத்தில் அப்துல் லீ. நண்பனின் சுகதுக்கங்களில் எப்போதும் பங்கெடுக்கும் இது மாதிரியான நண்பர்கள்தான் பலரது வாழ்க்கையில் தூணாக இருக்கிறது. வில்லன் போன்ற குணாதிசயத்தில் வீரா. யோகிபாபுவை சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்பதில் முழு முனைப்புடன் இருப்பவர்.

வாகன திருட்டு மாஃபியா அல்லது இந்தியாவில் மோட்டார் வாகனம் வைத்திருப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் வாகன உரிமையாளருக்கு எதிராக அறியாமை அல்லது சக்தியின்மை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை தோண்டி எடுக்கும் ஒரு திரைப்படத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் ஏமாற்றமடையலாம்.

ஷான் ரோல்டன் இசையமைப்பில் பின்னணி இசையானது படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது. சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு காட்சிகளுக்குரிய யதார்த்தத்தை அருமையாய் படம் முழுவதும் பதிவு செய்திருக்கிறது. இங்கே, எழுத்தாளர்- இயக்குனர் பாலாஜி வேணுகோபால், அவர்கள் வழக்கமான ஹீரோயிசத்தைத் தவிர்த்து மிகவும் எளிமையான கதையைத் தேர்வு செய்கிறார். இடைவேளை வரைக்கும் சுவாரசியமாக நகரும் படம், அதன் பின் கொஞ்சம் தடுமாறுகிறது. தொலைத்த காரைத் தேடி யோகிபாபு அலைவதும், அவரை வீரா (சிவக்குமார்) வெறுப்பேற்ற நினைப்பதும் என காட்சிகள் ‘ரிபீட்’ ஆவது போன்ற உணர்வுதான் வருகிறது. அதை மட்டும் சரி செய்திருந்தால் ‘லக்கிமேன்’ கொஞ்சம் ‘சூப்பர்மேன்’ ஆக (Lucky Man Movie Review) மாறியிருப்பார்.

Latest Slideshows

Leave a Reply