Lucky Man Teaser : யோகி பாபு நடித்துள்ள லக்கி மேன் படத்தின் டீசர் வெளியீடு...

யோகி பாபு நடித்துள்ள லக்கி மேன் படத்தின் டீசர் வெளியாகி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லக்கி மேன்’. திங்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார். யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க வீரா, ரேச்சல் அமித் பார்கவ், அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி, ரேச்சல் ரேபேக்கா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பேசும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Lucky Man Teaser :

“இந்த உலகம் அழகாக இருக்குறவன ரசிக்கும், அறிவோடு இருக்குறவன மதிக்கும். பணம் உள்ளவனை பார்த்து பொறாமை படும். பதவியில் இருக்குறவனை பார்த்து பயப்படும். ஆனா என்னைக்குமே உழைக்குறவன மட்டும் தான் நம்பும்” என்ற டீசரின் முதல் வசனம் ‘லக்கி மேன்’ என்ற டைட்டிலில் இருந்து முரண்படுகிறது. அதிர்ஷ்டத்திற்கும் கடின உழைப்பிற்கும் உள்ள வித்தியாசத்தை படம் பேசுவதாக தெரிகிறது. கடையில் ‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’ என்கின்ற வசனத்திற்கு பிறகு ‘விவசாயம் பண்ணுங்க, அதை தவிர்த்து என்னென்னமோ பண்ணுறீங்க’ என தனது பாவனையில் யோகிபாபு டீசரை முடித்துள்ளார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Latest Slideshows

This Post Has One Comment

  1. Gopala Krishna

    Iam a Fan of his comedy acting& I am Waiting for this movie

Leave a Reply