Luna 25 Failure : நிலவை ஆராய சென்ற லூனா 25 தோல்வி...

Luna 25 Failure :

நிலவை ஆராய்வதற்காக ரஷ்யாவின் விண்வெளித் திட்டங்களின் ஒரு பகுதியாக அந்நாடு ஏவப்பட்ட லூனா-25 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் சந்திரயான் 3-க்குப் பிறகு ஏவப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் அதற்கு முன்னதாக நிலவில் தரையிறங்கவிருந்தது. ஆனால் எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறால் லூனா-25 நிலவில் இறங்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது. இதனால் லூனா-25 தரையிறங்குவது தாமதமாகுமா அல்லது ரஷ்யாவின் விண்வெளித் திட்டம் தோல்வியடையுமா என்ற கேள்விகள் எழுந்து வந்தன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை காரணமாக அதன் விண்வெளி திட்டங்களில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளி ஆய்வில் தொடர்ந்து உதவி வரும் ஐரோப்பிய யூனியன், உக்ரைன் விவகாரத்தை முன்வைத்து இம்முறை ரஷ்யாவையும் புறக்கணிக்கிறது. இதன் காரணமாக தனித்து நின்று விண்வெளி சாதனையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. லூனா 25 திட்டத்தின் துவக்கத்தின் போது ரோஸ்கோஸ்மோஸ் பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்தது. சுமார் அரை நூற்றாண்டில் ரஷ்யாவின் முதல் சந்திர பயணத்தின் வெற்றி குறித்து ரோஸ்கோஸ்மோஸுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால், மேற்கத்திய புறக்கணிப்புக்கு மத்தியில் நிலவை ஆராய்வதற்கான ரஷ்யாவின் முயற்சிகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று அதிபர் புதின் காட்டிய வலியுறுத்தியதால் லூனா 25 விண்கலம் அவசரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தற்போது நிலவின் தென்துருவபகுதியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் இந்தியாவின் சந்திரயான் 3, நாளை மறுநாள் நிலவில் “சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்க உள்ளது. இதே போல், ரஷ்யாவும் கடந்த 1976 ஆண்டுக்கு பிறகு, 47 ஆண்டுகள் முயற்சித்து, நிலவை ஆய்வு செய்ய “சோயுஸ் 2.1 பி” என்ற ராக்கெட் மூலம் லூனா-25 விண்கலத்தை ரஸ்யாவின் வாஸ்டோக்னி ஏவுதளத்தில் இருந்து கடந்த 11ம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த லூனா-25 விண்கலம் 1,800 கிலோ எடை கொண்டதாகும். நிலவின் மேற்பரப்பில் உள்ள குடிநீர், ஆக்சிஜன், கனிமங்கள், எரிபொருள், போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தலூனா-25 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை 5 நாளில் சென்றடைந்து. அதன் பிறகு, 4 முதல் 5 நாட்கள் நிலவின் பாதையில் சுற்றி வந்து பின்னர் தென் துருவபகுதியில் தரையிறங்குவதற்கான இடத்தை ஆய்வு செய்து தரையிறங்கும்.

அதன் பிறகு, நிலவின் தென்துருவத்தில் ஓராண்டு ஆய்வு மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது. மேலும், நிலவின் தென் துருவத்தில் உள்ள மண், கனிமங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே நிலவில் கால்தடம் பதித்த நாடுகளாக இருந்தன. ஆனால் அந்நாடுகள் நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளவில்லை. தற்போது ரஷ்யாவும், இந்தியாவும் மட்டுமே இதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. ரஷ்யாவின் லூனா-25, சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23ம் தேதி தரையிறங்குவதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 21ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Luna 25 Failure : இது ரஷ்யாவின் நிலவை பற்றிய 47 ஆண்டு கால முயற்சிகள் தோல்வியாக (Luna 25 Failure) கருதப்படுகிறது. மேலும், ரஷ்யாவுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் உலகநாடுகளுக்கு இடையே பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. லூனா-25 விண்கலமானது திட்டமிட்டப்படி இன்று நிலவில் தரையிறங்கி இருந்தால், நிலவின் தென்துருவபகுதில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்று இருக்கும். தற்போது ரஷ்யாவின் இந்த முயற்சியானது தோல்வி அடைந்திருக்கும் நிலையில், நமது இந்தியாவின் சந்திரயான் 3ல் இருந்து பிரிந்த “விக்ரம் லேண்டர்” கருவி, நாளை மறுநாள் ஆகஸ்ட் 23 மாலை 6.04 மணிக்கு தரையிறங்க இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். திட்டமிட்டபடி, விக்ரம் லேண்டர் நாளை தரையிறங்கும் பட்சத்தில், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல்நாடு என்ற பெருமையை இந்தியா பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

Latest Slideshows

Leave a Reply