36 செயற்கை கோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்த LVM3-M3 ராக்கெட்

இந்தியாவின் மிகப்பெரிய LVM3-M3 ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்று கிழமை காலை விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் இருந்து GSLV, PSLV, SSLV வகை ராக்கெட்டுகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதில் எடையை தூக்கிச் செல்லும் GSLV ரகத்தின் கீழ் வரும் இந்த LVM3M3 ராக்கெட்டை  இஸ்ரோ வில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இஸ்ரோ தயாரித்ததிலேயே  GSLV க்குப் பிறகு இந்த LVM3-M3 ராக்கெட் தான் அதிக எடை கொண்டது என கூறப்படுகிறது. இதில் ஒன்வெப் இந்தியா இரண்டிற்கான 36 செயற்கைகோள் பொறுத்த பட்டுள்ளன. இந்த ராக்கெட் 643 டன் எடையையும், 43.5 மீ உயரத்தையும் கொண்டதாகும். மேலும் 5805 கிலோ எடையுள்ள 36 ஜென் 1 செயற்கை கோள்களை இது சுமந்து சென்றது.

இன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவில் சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து சரியாக காலை 9 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இணைய சேவை நிறுவனமான ஒன்வெப், ஸ்பேஸ் க்ஸ், ஏரியன் ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோ ஏவுகள் சேவைகளை பயன்படுத்தி அதன் முதல் ஜெனரேஷன் விண்மீன் செயற்கைக் கோள்களின் சுற்று பாதையில் இந்த ராக்கெட் நிலை நிறுத்தும் வகையில் ஏவப்பட்டுள்ளது. 

பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக்கோல்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு 2022 அக்டோபர் மாதம் 23 ம் தேதி தொடர்ச்சியாக 36 சாட்டிலைட்டுகள் வணிகரீதியாக விண்ணில் செலுத்த பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ச்சியாக மற்றொரு 72 ல் மீதியுள்ள 36 செயற்கை கோள்களை செலுத்தியுள்ளனர்.

இந்த செயற்கைக்கோளானது அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. திட, திரவ மற்றும் கிரியோனஜிக் இயந்திரங்களால் மூன்று நிலைகளை கொண்ட ராக்கெட்டாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. அதனோடு இந்த ராக்கெட்டானது  தாழ்வான புவி சுற்றுவட்ட பாதைக்கு 8 டன் அளவிலான எடையை கொண்டு செல்லும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பு.

விண்ணில் செலுத்தப்பட்ட இந்த செயற்கை கோள்கள் 16 வது தொகுதி என சொல்லப்படுகிறது. இந்த செயற்கை கோளை விண்ணில் செலுத்தும்போது பார்வையாளர் மாடத்தில் இருந்து பொது மக்களும், பள்ளி மாணவர்களும் உற்சாகமாக அதனை ரசித்தனர்.

வணிக ரீதியான பயன்பாடு:

LVM3-M3 ராக்கெட்டிடை வணிகரீதியாக பார்த்தால் இது வருவாயை ஈட்டி தரக்கூடியதில் முக்கியமானது. இந்த மிஷன் முழுமையாக 36 செயற்கை கோள்களுமே வர்த்தகரீதியா வெளியில் இருந்து கொடுக்கப்பட்டு அவர்களுக்காகவே அர்ப்பணிக்கும் ஒரு மிஷன். இது டெடிகேட் மிஷன் என்பதால், இந்த இரண்டாவது மிஷனை நாம் சரியாக செய்துவிட்டால் உலகளவில் பிற நாடுகளிடையே நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

மாஸ்க் 3 மிஷனும் உயர் நம்பகத்தன்மை என்று உலகத்திற்கு நிரூபிக்கிறோம். இதன் மூலமாக நிறைய வாடிக்கையாளர்கள் நம்மைநோக்கி வர வாய்ப்புகள் உண்டு. வர்த்தக ரீதியான ஒரு நம்பிக்கையை இந்த மிஷன் உருவாக்கித் தரும் என்றும் சொல்லப்படுகிறது.  

Latest Slideshows

Leave a Reply