Maamannan Audio Launch: மாமன்னன் படத்தின் கோலாகல இசை வெளியீட்டு விழா

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் வடிவேலு, மலையாள நடிகர் பகத் பாசில், லால், விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்டர் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராசா கண்ணு’ மற்றும் ‘ஜிகு ஜிகு ரெயில்’ ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களை கவர்ந்தது.

இசை வெளியீட்டு விழா

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்த விழாவில் மாமன்னன் படத்தில் இருந்து அனைத்து பாடல்களும் வெளியானது. இதன்படி படத்தில் இருந்து 7 பாடல்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பாடலையும் வெரைட்டியாக கொடுத்து ரசிகர்களுக்கு மியூசிக்கல் ட்ரீட் கொடுத்துள்ளார், ஏ.ஆர். ரகுமான். ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களை தவிர ‘கொடி பறக்குற காலம்’, ‘நெஞ்சமே நெஞ்சமே’, ‘மன்னா மாமன்னா’, ‘உச்சந்தல’, ‘வீரனே’ ஆகிய பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Maamannan Audio Launch-ல் கலந்துகொண்ட பிரபலங்கள்

இந்நிலையில் உதயநிதியின் கடைசிப் படம் மாமன்னன் என்பதால் நேரு ஸ்டேடியத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் குவிந்துள்ளனர். இந்த விழாவிற்கு ரஜினிகாந்த் மற்றும் கமல் இருவரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கமல் மட்டுமே விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் நிகழ்ச்சியில் உதயநிதியின் தாயார் துர்கா ஸ்டாலின், உதயநிதியின் மனைவி கிருத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல், தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குநர்கள் வெற்றிமாறன், பாண்டிராஜ், மிஷ்கின், ஏ.ஆர்.முருகதாஸ், விக்னேஷ் சிவன், பா.ரஞ்சித், எச். வினோத், எஸ்.ஜே. சூர்யா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, கவின், சூரி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாமன்னனின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் மாரி செல்வராஜ், உதயநிதி உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

உதயநிதி ஸ்டாலின்

மாமன்னன் படத்தின் கதாநாயகன் உதயநிதி பேசுகையில் அமைச்சர் பொறுப்பை கொடுத்த பிறகும் நான் படங்களில் நடித்தால் சரியாக இருக்காது. நிறைய வேலை இருக்கிறது. பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையே, படத்தின் டப்பிங் மற்றும் இசை வெளியீட்டு விழாவிற்காக நேரத்தை ஒதுக்கியுள்ளேன். எனக்குத் தெரிந்தவரை இதுதான் கடைசிப் படமாக இருக்கும். நல்ல படமாக அமைந்ததுக்கு திருப்தியாக உள்ளது. படத்தில் நானும், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் எவ்வளோதான் நடித்திருந்தாலும் வடிவேலு எங்களுக்கும் மேலாக நடித்துக்கள்ளார் என் கூறினார்.

வடிவேலு

அதே போல் வடிவேலு பேசும் போது, ​​“நான் என்னைக்கு கேப் விட்டேன், அதான் உங்க மொபைல் போன்ல மீமா வந்து விழுந்தேனே என கலகலப்பாக பேசி ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை உற்சாகப்படுத்தினார்.

கீர்த்தி சுரேஷ்

மாமன்னன் படத்தின் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது நீண்ட நாட்களுக்கு பிறகு எனது படம் வெளியாகிறது. மும்பையில் இருந்து வருவதால் தாமதமாகிறது. இது முற்றிலும் வேறு ஒரு படமாக இருக்கும். இது ஒரு வித்தியாசமான படம். இந்தப் படத்தில் நான் கம்யூனிஸ்ட்டாக நடித்துள்ளேன். இந்தப் படம் ஒரு பொதுவான விஷயத்தைப் பேசுகிறது என்பது அனைவருக்கும் புரியும். எனக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பதிலேயே இறுக்கிங்க. எனக்கு திருமணம் என்றால் கண்டிப்பாக சொல்வேன் என்று தெரிவித்தார்.

Latest Slideshows

Leave a Reply