Maamannan Second Single: தீ பிடிக்கும் செகண்ட் சிங்கிள்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் மாமன்னன் ஆகும். இந்த படம் ஜூன் மாதம் வெளியாகிறது. இந்தப் படத்தில் வடிவேலு, உதயநிதி, கீர்த்தி சுரேஷ், ஃபஹத், லால் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் மாமன்னன் படத்தின் முதல் சிங்கிள் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வடிவேலு, உதயநிதி, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் மற்றும் லால் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மாமன்னன் தான் தனது கடைசி படம் என்று உதயநிதி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் வடிவேலு தான் மாமன்னன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக மாரி செல்வராஜ், உதயநிதி இருவரும் தெரிவித்தனர். இதுவரை காமெடியில் பார்த்து ரசித்த வடிவேலு, மாமன்னனின் படத்தில் சீரியஸ்ஸான ரோலில் நடித்துள்ளார். இதனால் வடிவேலுவின் கேரக்டர் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு கடந்த வாரம் வெளியான ராசா கண்ணு பாடல் ஒரு வழிவகுத்தது.

Maamannan First Single

ஏ.ஆர் ரகுமான் இசையில், யுகபாரதி வரிகளில் ஒப்பாரியும் ஒரு சமூகத்தின் வலியும் கலந்த பாடலாக “ராசா கண்ணு” பாடல் வெளியானது. வடிவேலுவின் குரலில் பாடலை கேட்ட ரசிகர்கள் இதுதான் அவரது கேரியரில் உச்சம் என பாராட்டி உள்ளனர். இந்நிலையில், மாமன்னனின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பாடல் நாளை (மே 27) வெளியாகிறது.

Maamannan Second Single

மாமன்னனின் இரண்டாவது சிங்கிள் நாளை வெளியாக இருக்கும் நிலையில் படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது. வெளியான இந்த போஸ்டரில் மாரி செல்வராஜும் மற்றும் ஏ.ஆர் ரகுமானும் மாஸ் காட்டுகின்றனர். கருப்பு மற்றும் வெள்ளை கலர் டோனில் உருவாகியுள்ள இந்த போஸ்டரில் ஏ.ஆர்.ரகுமான், மாரி செல்வராஜ் இருவரும் மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த பாடலுக்கு ஏ.ஆர் ரகுமான் Reggae என்ற கேப்ஷன் கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ்.

மாமன்னன் இரண்டாவது சிங்கிள் ராப் இசை பின்னணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடிவேலுவின் குரலில் முதல் பாடலை வெளியிட்ட மாமன்னன் படக்குழுவினர், இரண்டாவது சிங்கிளில் வேறு லெவலில் தெறிக்கவிடப்படும் என ரசிகர்களும் காத்திருக்கின்றனர். இதனிடையே மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் இதில் கமல் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply