Maaveeran Movie Trailer: வெறித்தனமாக வெளியான மாவீரன் ட்ரைலர்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ள மாவீரன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதியதாக உருவாகியுள்ள திரைப்படம் படம் மாவீரன் ஆகும். இந்த படத்தில் கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி நடித்துள்ளார். யோகி பாபு நடித்த மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். மண்டேலா படத்திற்காக 2 தேசிய விருதுகளை வென்றார். படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். மேலும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

மாவீரன் ஒரு கற்பனைத் திரைப்படம். இதில் சிவகார்த்திகேயன் கார்ட்டூனிஸ்டாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மாவீரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மாவீரன் ரிலீஸுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. இப்படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. இதில் சீனு சீனு என்ற பாடலை அனிருத் பாடியுள்ளார். அதேபோல், இரண்டாவதாக வந்த வண்ணாரப்பேட்டையில் இந்த பாடலை சிவகார்த்திகேயனும், அனிருத்தும் இணைந்து பாடியுள்ளனர். இந்த இரண்டு பாடல்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ட்ரைலர் வெளியீடு (Maaveeran Movie Trailer)

மாவீரன் படத்தின் ட்ரைலர் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரவு 8 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதன்படி டிரைலர் வெளியாகியுள்ளது. மாஸாக வெளியாகியுள்ள இந்த டிரைலர் தற்போது யூடியூப்பில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலருக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. டிரைலர் மாஸாக வெளியானதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. டிரெய்லரைப் பார்க்கும்போது, இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஹிட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply