Madras HC Recruitment 2024 : சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.2,05,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை (Madras HC Recruitment 2024) சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைகளுக்கு முறையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் செயல்முறை பற்றி தற்போது காணலாம்.

Madras HC Recruitment 2024 - பணியிட விவரங்கள் :

  • பணி : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பாளர்களை நிரப்புவதற்கான (Madras HC Recruitment 2024) அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

  • பணியில் சேர்வதற்கான வயது வரம்பு : மொழிபெயர்ப்பாளர் பணிக்கு 01.07.2024 தேதியின் படி குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/எம்.பி.சி/பி.சி.எம் ஆகிய பிரிவினருக்கு அதிகபட்ச வயது 37 வரை இருக்க வேண்டும்.

  • சம்பள விவரம் : மொழிபெயர்ப்பாளர் பணிக்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை ஊதியம் வழங்கப்படும்.

  • கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். மாநில மொழிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

  • பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை : மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் வைவா மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். அதன்பின், இறுதிக்கட்ட வைவா நடைபெறும்.

  • விண்ணப்பிக்கும் முறை : சென்னை உயர்நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் பணிகளுக்கு (Madras HC Recruitment 2024) https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பிக்க கடைசி தேதி : 29/07/2024

Latest Slideshows

Leave a Reply