Madras High Court Order Quashing Sec 77A and 77B : பத்திரப்பதிவு சட்ட பிரிவு 77A/77B-யினை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் பத்திரப்பதிவு சட்ட பிரிவான 77A மற்றும் 77B-யினை ரத்து செய்து பிறப்பித்த தடை உத்தரவினை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள வழக்கிற்கு ஆதரவு தெரிவித்து பதிவுத்துறை தலைவர் திரு.P.மூர்த்தி அவர்களுக்கு, பெயிரா (FAIRA) தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள இந்த கடிதத்தில் தமிழக பத்திர பதிவுத்துறை நாட்டின் சிறந்த தொழில்நுட்பங்களை (Madras High Court Order Quashing Sec 77A and 77B) கொண்டு பத்திர பதிவு அனைத்தும் ஸ்டார் மென்பொருள் மூலம் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

வில்லங்கச் சான்று

தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவர்களிடையே வெளிப்படை தன்மை மற்றும் நம்பகத் தன்மையை உறுதி செய்யும் நோக்கத்தில், சொத்து பரிவர்த்தனைகள் சம்பந்தமான தகவல்களை உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் ‘வில்லங்கச் சான்று’ இணையதளம் மூலமாக இலவசமாக பார்வையிடவும் மற்றும் பதிவிறக்கம் செய்யவும் வசதிகள் செய்யப்பட்டது.

மேலும் போலி ஆவணங்களை தடுக்க பதிவுத்துறையினால் பல கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்தாலும், பதிவுத்துறையில் பணிபுரியும் சில ஊழியர்கள், ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்து சொத்துக்களை விற்பனை செய்து வந்தனர். இந்த போலி ஆவணம் மூலம் பாதிக்கப்பட்ட உண்மையான உரிமையாளர்கள் மீண்டும் தங்களின் சொத்துக்களை திரும்ப பெற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா வேண்டுகோள் வைத்து புகார் மனுக்களை அனுப்பி வைத்தது.

வழிகாட்டி நெறிமுறைகள் (Madras High Court Order Quashing Sec 77A and 77B )

பெயிராவின் வேண்டுகோளை ஏற்று, போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்வதை தடுக்கும் நோக்கத்தில், தமிழக சட்ட சபையில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி உரிய சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டு, வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, தமிழக பத்திரப்பதிவு சட்ட பிரிவு 77A மற்றும் 77B ஆகிய 2 புதிய உட்பிரிவுகளை பதிவுத்துறையில் தமிழக அரசு சேர்த்து, இந்த உட்பிரிவுகளின் மூலம் போலியான சொத்து பத்திரங்கள் குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்தால், அவர் அந்த புகாரை விசாரித்து, குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் இருந்தால் இந்த சட்ட பிரிவை பயன்படுத்தி, அந்த பதிவை ரத்து செய்யலாம் என மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி உடனடியாக நடைமுறைப்படுத்தியது. பதிவுத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பெயிரா கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தது.

மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் இல்லை

Madras High Court Order Quashing Sec 77A and 77B - Platform Tamil

இந்த பத்திரப்பதிவு சட்ட பிரிவினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என ஒரு சிலர் இந்த சட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு, மாவட்ட பதிவாளருக்கு போலி ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரம் இல்லை என தீர்ப்பளித்து இந்த பத்திரப்பதிவு சட்ட பிரிவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

சென்னை உயர் நீதிமன்றம் இந்த இரண்டு சட்ட பிரிவை ரத்து செய்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, பதிவுத்துறை உச்ச நீதிமன்றத்தில், தற்போது மேல் முறையீடு செய்துள்ளது. பதிவுத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பான பெயிரா இந்த வழக்கில் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து, இந்த மேல் முறையீட்டில் தங்களையும் இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply