Madurai Alanganallur Jallikattu : மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களம்

Madurai Alanganallur Jallikattu :

தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் போற்றும் உலகப் பிரசித்தி பெற்ற வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு (Madurai Alanganallur Jallikattu) ஆகும். தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் கிராமத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு (Madurai Alanganallur Jallikattu) என்றழைக்கப்படும் மாடு பிடிக்கும் வீர விளையாட்டு ஆனது ஆண்டு தோறும் நடைபெறும். இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு (Madurai Alanganallur Jallikattu) ஆனது அந்த விளையாட்டில் உள்ள விறுவிறுப்பின் காரணமாகவும், ஊடகங்கள் மற்றும் தமிழ் திரைப்படங்களின் மூலமும் உலக அளவில் பிரபலமாக உள்ளது.

இந்த மாநிலம் முழுவதும் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய ஊர்களில் பொங்கலை முன்னிட்டு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காணதிரள்வர். ஒரே நேரத்தில் அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டை கண்டுகளிக்க ஏதுவாக ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில், உலகத் தரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் ஆனது கட்டப்பட்டு வருகின்றது. தமிழக அரசு இந்த ஜல்லிக்கட்டு போட்டியிற்கு சிறந்த ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கக்கூடிய பணிகளை சுமார் 44 கோடி மதிப்பீட்டில் செய்து வருகின்றது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தின் சிறப்புக்கள் :

  • ஜல்லிக்கட்டு மைதானம் ஆனது உலகத் தரத்தில் கிரிக்கெட் மைதானம் போல கட்டப்பட்டு வருகிறது.
  • சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் அலங்காநல்லூரில் உள்ள கீரைத்துறை கிராமத்தின் மலை அடிவாரத்தில் இந்த ஜல்லிக்கட்டு மைதானம் ஆனது கட்டப்பட்டு வருகின்றது.
  • இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தின் முகப்பு பகுதியானது அரண்மனை தோற்றத்தில் காட்சி அளிக்கின்றது.
  • கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அமர்ந்து கிரிக்கெட்டைப் பார்ப்பது போல் இந்த மைதானத்தின் உட்புறத்தில் 4,500-க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த மைதானத்திற்கு 3 நுழைவுப் பகுதிகளும் கட்டப்பட்டு வெளிப்புறத்தில் புல் தரை மற்றும் செடிகள் வைத்தும் தார் சாலைகளும் போடப்பட்டு வருகின்றது.
  • இந்த மைதானத்தின் ஒரு பகுதியில் வாடிவாசலும் கட்டுப்பட்டு வருகின்றது.
  • அதேபோல் காளைகள் மைதானத்தில் வரிசையாக வாடி வாசலுக்கு வரும் வகையில் கம்பிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.
  • மாடுபிடி வீரர்களுக்கான உடைமாற்றும் அறை, பொருள் வைப்பறை, தங்கும் அறை, பொருட்கள் பாதுகாக்கும் அறை, விற்பனை கூடம், பத்திரிக்கையாளர் அறை, மாடுபிடி வீரர்கள் பரிசோத னைக்கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம் மற்றும் நிர்வாக அலுவலகம் என பல்வேறு அறைகளும் இந்த மைதானத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.
  • இந்த மைதானத்தில் நுழைவு வாயில் வளைவு, காளைகள் சிற்பக் கூடம், உட்புறச் சாலைகள், மழைநீர் வடிகால் வசதி, செயற்கை நீரூற்று, புல் தரைகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டு வருகின்றன.
  • மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் இந்த மைதானத்துக்கு பார்வையாளர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் ரூ.22 கோடியில் புதிய சாலைகளும் அமைக்கப்பட உள்ளன.
  • இந்த மைதானத்தில் ஜல்லிக்கட்டு மட்டு மில்லாது, பண்பாடு மற்றும் கலாச்சார விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், கால் நடை சந்தை ஆகியவையும் நடத்தப்பட உள்ளன.
  • அதன்மூலம் ஈட்டப்படும் வருவாய் ஆனது மைதான பராமரிப்புக்கு செலவிட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சுற்றுலாத் துறை மூலம் இந்த மைதானத்தை பண்பாட்டு வளாகமாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • மைதானம் கட்டி முடிக்கப்பட்டதும், விளையாட்டு மைதானங்களை நிர்வகிப்பதில் அனுபவம் பெற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் இந்த ஜல்லிக்கட்டு மைதானம் ஒப்படைக்கப்படும்.

பொங்கல் பண்டிகை நாளில் அலங்காநல்லூரில் பாரம்பரிய முறைப்படி ஜல்லிக்கட்டு நடந்தாலும், மற்றொரு நாளில் கீழக்கரையில் தற்போது கட்டப்படும் இந்த மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்த (Madurai Alanganallur Jallikattu) தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply